Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

8,800 மாணவர்களுக்கு இலவச கல்வி சுற்றுலா:தி.மலை நகராட்சி சார்பில் புத்துணர்வு திட்டம் அறிமுகம்

Print PDF

தினமலர் 03.02.2010

8,800 மாணவர்களுக்கு இலவச கல்வி சுற்றுலா:தி.மலை நகராட்சி சார்பில் புத்துணர்வு திட்டம் அறிமுகம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை நகராட்சி பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 800 மாணவ, மாணவிகளை இலவச கல்விச்சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது.திருவண்ணாமலை நகராட்சி சார்பில், வேறு எங்கும் இல்லாத வகையில் மாணவர்களை இலவசமாக கல்விச்சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார்.

துணை தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கார்த்திவேல்மாறன், நகராட்சி கமிஷனர் சேகர், இன்ஜினியர் சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இது குறித்து தி.மலை நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன் கூறியதாவது;தி.மலை நகரில் மொத்தம் 23 நகராட்சி பள்ளிகள் உள்ளன. இவற்றில் 8 ஆயிரத்து 800 மாணவர்கள் படித்து வருகின்றனர். 1

ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் நகராட்சி சார்பில் இலவசமாக கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். அனைத்து செலவையும் நானே ஏற்றுக் கொண்டுள்ளேன். மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதால் அவர் களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும். அதன் மூலம் படிப்பில் அவர்கள் ஆர்வத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

இன்று (நேற்று) முதற்கட்டமாக, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அமராவதி முருகையன் நகராட்சி பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவிகள் ஆயிரம் பேர் சாத்தனூர் அணைக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 10 பஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மாணவிகளுக்கு மதிய உணவு மற்றும் நொறுக்கு தீனிகள் இலவசமாக வழங்கப் பட்டது.

சாத்தனூர் "பிக் அப்' டேமில் இருந்து தி.மலை நகருக்கு எப்படி சுத்திகரிப்பு செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து நேரில் விளக்கப்பட்டது.சாத்தனூர் அணையின் முக்கியத்துவம், அதனை சார்ந்துள்ள விவசாய பகுதிகள், குடிநீர் திட்டங்கள் குறித்தும், சாத்தனூர் அணையில் இருந்து நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் முறை குறித்தும் விளக்கப்பட்டது.

இதன் மூலம் மின் உற்பத்தி, மின் சிக்கனம் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.தி.மலையில் உள்ள நகராட்சி பள்ளியில் எந்தந்த பள்ளிகள் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுகிறதோ, அந்த பள்ளி மாணவர்கள் அவர்கள் விரும்பும் சுற்றுலா இடத்துக்கு எனது சொந்த செலவில் அவர்கள் அனைவரையும் அழைத்து செல்வேன்.இவ்வாறு சேர்மன் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 03 February 2010 07:53