Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க முடிவு

Print PDF

தினமலர் 04.02.2010

பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க முடிவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் சீரமைக்கப்பட உள்ளன.துணை முதல்வர் ஸ்டாலின், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் சீரமைப்பு திட்டம் என்ற புதிய திட்டத் தை கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி சட்டசபையில் அறிவித்தார். இத்திட்டம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் 2008-09 மற்றும் 2009-10ம் ஆண்டுகளில் 117 ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் ஒரு கோடியே 20 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகள் நடந்தன. வரும் நிதியாண்டிலும், பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பள்ளிக் கட்டடங்களுக்கு பெயின்ட் அடித்தல், கூரை மற்றும் தளம் பழுது பார்த்தல், கரும்பலகை பெயின்டிங் செய்தல், கதவு மற்றும் ஜன்னல்கள் பழுதுபார்த்தல், புதிதாக மாற்றி அமைத்தல், சேதமடைந்த ஓடுகள், ரீப்பர்கள் மற்றும் சட்டங்களைப் பழுது பார்த்தல், சுவர்களில் உள்ள விரிசல்களை சரிபார்த்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

இப்பணிகளின் தேவையை நேரில் ஆய்வு செய்து, தேர்வு செய்திட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் ஊராட்சித் தலைவர், தலைமையாசிரியர், உதவி துவக்கக் கல்வி அலுவலர், ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் அல்லது உதவிப் பொறியாளர், வட் டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் இடம் பெறுவர். ஒவ்வொரு குழுவும் பணிகளை தேர்வு செய்து அறிக்கை தயார் செய்வர்.

இது தொடர்பாக, ஒவ்வொரு பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் தனியே கடிதம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. தேவைப் பட்டியல் அடிப்படையில் மதிப்பீடுகள் தயாரிக் கப்பட்டு பணிகள் மேற்கொள்வதற் கான நிர்வாக அனுமதி வழங்கி, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் படும்.

பணிகள் முறையாக தேர்வு செய்வதையும், சரியான மதிப்பீடுகள் தயாரிப்பதையும் உறுதி செய்து ஒவ்வொரு ஒன்றிய அளவில் கலெக் டர், திட்ட இயக்குனர், மாவட்ட நிலை அலுவலர்கள் பள்ளிகளைப் பார்வையிட்டு, சரித்தன்மையை ஆய்வு செய்வர். 2010-11ம் ஆண்டு இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறப்பான முறையில் சீரமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்படும் என கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 04 February 2010 06:26