Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை: மேயர் தகவல்

Print PDF

தினமலர் 12.03.2010

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை: மேயர் தகவல்

சென்னை : ""மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சிறுநீரக பரிசோதனை நடத்தப்படும்,'' என்று மேயர் சுப்பிரமணியன் கூறினார்.உலக சிறுநீரக தினத்தையொட்டி ராமச்சந்திரா மருத்துவமனை சிறுநீரகவியல் துறை சார்பில், ஆழ்வார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சிறுநீரக பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.

முகாமை மேயர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசியதாவது:உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ராமச்சந்திரா மருத்துவமனை சிறுநீரக பரிசோதனை செய்வது பாராட்டத்தக்கது. மாநகராட்சி நடத் திய பல மருத் துவ முகாம்களில் ராமச்சந்திரா மருத் துவமனை ஒருங்கிணைந்து செயல் பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக வீடு தேடிச் சென்று ரத்த பரிசோதனை செய்யும் திட்டம் சென்னையில் துவக்கப்பட்டுள்ளது.தற்போது ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ய, மண்டலத்திற்கு ஒரு டெக்னீஷியன்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தேவைக்கேற்ப மண் டலத்திற்கு மூன்று அல்லது நான்கு பேரை நியமிக்க ஆலோசனை நடந்து வருகிறது.சிறுநீரகத்தை பாதுகாக்க சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியம். மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சிறுநீரக பரிசோதனை செய்வது தொடர்பாக 15ம் தேதி வெளியிடப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். இவ்வாறு சுப்பிரமணியன் பேசினார்.நிகழ்ச்சியில் ராமச்சந்திரா பல் கலைக்கழக துணை வேந்தர் ரங்கசாமி, டீன் சோமசுந்தரம், சிறுநீரகவியல் துறை டாக்டர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 12 March 2010 06:12