Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி துவக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவி

Print PDF

தினமணி 29.03.2010

நகராட்சி துவக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவி


நாமக்கல், மார்ச் 28: நாமக்கல் நகராட்சி துவக்கப் பள்ளிó குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை ஆர்எஸ்ஜி சமூக சேவை மையம் இலவசமாக வழங்கியது. மையத்தின் சார்பில் பகவத்சிங் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கோட்டை நகராட்சி துவக்கப் பள்ளியில் நடந்த விழாவில், பகவத்சிங் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பள்ளியில் கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவசமாக எழுது பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கும் விளையாட்டு உபகரணங்களும், பொம்மைகளும் வழங்கப்பட்டன. சமூக சேவை மையத் தலைவர் கோபிகாந்தி தலைமை வகித்தார். 11-வது வார்டு கவுன்சிலர் நடராஜ், நலத் திட்ட உதவிகளை வழங்கினார். சேவை மைய செயலர் பன்னீர்செல்வம், பொருளாளர் அவினாசிலிங்கம், பள்ளித் தலைமையாசிரியர் கிருத்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 29 March 2010 10:31