Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி 08.04.2010

பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

அரவக்குறிச்சி
, ஏப். 7: பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள் பற்றிய கணக்கெடுக்கும் பணி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள் பற்றிய கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவஞானம், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பரமானந்தம் ஆகியோரின் உத்தரவுப்படி இப்பணி நடைபெற்று வருகிறது.

பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் அரவக்குறிச்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மேற்பார்வையில் பள்ளி செல்லாத குழந்கைகள் மற்றும் படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி ஏப். 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற்றது.

கணக்கெடுக்கும் பணியை பள்ளபட்டி பேரூராட்சித் தலைவர் தோட்டம் டி.எம். பசீர்அகமது தலைமை ஏற்று தொடக்கிவைத்தார்.

கரூர், அரவக்குறிச்சி, பரமத்தி மற்றும் தாந்தோணி வட்டார வள மையத்திற்கு உள்பட்ட 54 ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று வீடு வீடாக கணக்கெடுத்தனர்.

நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் சாதிக்அலி, நத்தம் ஜாபர்அலி, சேட்கனி, சர்புதீன், பசீர்அகமது, ஆரீப்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Last Updated on Thursday, 08 April 2010 09:49