Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளி மாணவருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

Print PDF

தினமலர் 22.04.2010

மாநகராட்சி பள்ளி மாணவருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

மதுரை : மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கில பேச்சு பயிற்சி நேற்று தொடங்கியது.மகால் திருவள்ளுவர் மாநகராட்சி பள்ளியில் இதை தொடங்கி வைத்து, கமிஷனர் செபாஸ்டின் கூறும் போது, ''தமிழகத்தில் முதன்முறையாக பிளஸ் 1 படிக்கும் 200 ஏழை மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ சாரிடபிள் டிரஸ்ட், கிரேஸ் பீட்டர் சாரிடபிள் டிரஸ்ட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் மூலம் இச்சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. ஐந்து கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், ஐந்து ஆங்கில ஆசிரியர்களைக் கொண்டு, ஒரு நாளைக்கு ஐந்து வகுப்புகள் நடக்கும்'' என்றார்.மாநகராட்சி கல்வி அலுவலர் அம்மையப்பன் வரவேற்றார். தொண்டு நிறுவன நிர்வாகிகள் விஜயகுமார், கனகவேல் மனோர், ஜெகதீசன், நாகம்மை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை பசுல் ரஹ்மான் வாழ்த்தி பேசினர். மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன் நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 22 April 2010 06:57