Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பேரூராட்சி செயல்பாடு: பள்ளி மாணவர்கள் "விசிட்'

Print PDF

தினமலர்              26.10.2010

பேரூராட்சி செயல்பாடு: பள்ளி மாணவர்கள் "விசிட்'

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியின் செயல்பாடுகளை பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பொன் விழா கொண்டாட்டத்தையொட்டி "கிராம சபாவில் பஞ்சாயத்தின் பொறுப்புகள் மற்றும் மக்களின் அதிகாரங்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில், கிராம சபா மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களில் பொரு ளாதார, சமூக முன்னேற்றம் குறித்து பள்ளி மாணவ, மாணவியர் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை அங்கப்பா சி.பி.எஸ்.., பள்ளி மாணவ, மாணவியர் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தின் செயல்பாடுகளை அறிந்தனர்.

பேரூராட்சி தலைவர் சீனிவாசன் பேசியதாவது:

உள்ளாட்சி நிர்வாகங்களின் மக்கள் தொகையை பொறுத்து வார்டுகள் பிரிக்கப்படும். கிராம பஞ்சாயத்துகளில் நேரடியாகவும், பேரூராட்சியில் கவுன்சிலர்களும் தலைவர்களை தேர்வு செய்கின்றனர். பேரூராட்சியில் தலைவர், கவுன்சிலர்கள், செயல் அலுவலர், பொதுமக்களுடன் இணைந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி பணிகள் மேற் கொள்ளப்படுகிறது. மாதம் ஒரு முறை உள்ளாட்சி நிர்வாகங்களின் கூட்டம் நடத்தப்பட்டு, பணிகள் குறித்து திட்டமிடப்படும். இவ்வாறு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் பேசினார். பேரூராட்சியின் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல், வரி நிர்ணயம் செய்தல், ஆன்லைனில் வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். இப்பணி முடிந்தவுடன் "கிராமப் புறங்களில் ஜனநாயகம்' என்ற தலைப்பில் மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டிகளை அந்தந்த பள்ளி நிர்வாகம் நடத்தி, அதில் சிறந்தவை தேர்வு செய்யப்படும். பள்ளி, மாவட்ட, மாநில அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த கட்டுரைக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்படும். சிறந்த கட்டுரைகள் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செய்திப்பத்திரிக்கையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

Last Updated on Tuesday, 26 October 2010 09:20
 

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

Print PDF

தினமலர் 14.10.2010

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

மதுரை: .நா., சபையின் நிதி உதவியின் கீழ், தீ விபத்து, மின் கசிவு, வெள்ளம் போன்ற பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இதை செயல்படுத்த உள்ளன. மதுரையில் நேற்று, திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. மாநகராட்சி உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு நடந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) தர்ப்பகராஜ், ""இயற்கை பேரிடர் நிகழும் நேரத்தில், அதை எதிர்கொள்ளும் சூழல் இருக்காது. எனவே, இதுபோல் அமைதியாக இருக்கும் நேரத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்பதே புத்திசாலித்தனம்'" என்றார். திட்ட ஆலோசகர்கள் பாரிவேலன், வனிதா, சுரேஷ் மரியசெல்வம், ஜவகர்லால், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், உதவி கல்வி அலுவலர் வெள்ளத்தாய் கலந்து கொண்டனர். இன்று தொண்டு நிறுவனங்களுக்கும், அக்.21ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் பயிற்சி நடக்கிறது.

 

கரூர் நகராட்சி பள்ளியில் 186 மாணவருக்கு இலவச சைக்கிள்

Print PDF

தினகரன் 13.10.2010

கரூர் நகராட்சி பள்ளியில் 186 மாணவருக்கு இலவச சைக்கிள்

கரூர், அக்.13: கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமாமகேஸ் வரி, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி ஆகியோர் சைக்கிள் வழங்கினர்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் பல் வேறு திட்டப் பணிகளின் மூலம் மக்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். கல்விக்காக அரசு பல திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் மோட்டார் சைக்கிளில் சென்றாலும், சைக்கிளில் செல்வது உடல் நலத்திற்கு நல்லது. 80 ஆண்டுகள் பழமையான சைக்கிள் எங்களது வீட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. என்றார்.

186 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.6லட்சத்து 32ஆயிரத்து 400. விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பிரபு, தலைமை வகித்தார். தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் நன்னியூர் ராஜேந்திரன், கைத்தறி ஆலோசனைக்குழு உறுப்பினர் பரமத்தி சண்முகம், மாவட்ட ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு, முதன்மைக்கல்வி அலுவலர் கந்தசாமி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, கரூர் நகர்மன்ற துணைத்தலைவர் கனகராஜ், அரசு பாவேந்தர் விருது பெற்ற கவிஞர் கன்னல், வாழ்த்தி பேசினர். தலைமையாசிரியர் குமாரசாமி வரவேற்று பேசினார்.

உதவி தலைமையாசிரியர் சிவராஜ் நன்றி கூறினார் தாந்தோணி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரகுநாதன், தாசில்தார் தர்மராஜ், பசுவை சக்திவேல், பாலாஜி, கவுன்சிலர் ராஜலிங்கம், பெற்றோர், ஆசிரியர் கலந்து கொண்டனர்.

 


Page 35 of 111