Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு உதவி

Print PDF

தினமலர் 08.10.2010

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு உதவி

பெரம்பூர் : மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இலவச சீருடை மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட்டன.பெரம்பூரில் உள்ள ஸ்ரீ அய்யப்பா டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சீருடை மற்றும் புத்தக பைகள் வழங்கி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன், 50 மாணவர்களுக்கு உதவி செய்த இந்த டிரஸ்ட், தற்போது 500 மாணவர்களுக்கு மேல் உதவும் அளவிற்கு வளர்ந்துள்ளது.இந்தாண்டு மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி, நேற்று பெரம்பூரில் நடந்தது. நான்கு மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீருடை, புத்தக பை, பென்சில், பேனா ஆகியவை வழங்கினர்; அதன் மொத்த மதிப்பு நான்கு லட்சம் ரூபாய்.ஸ்ரீ அய்யப்பா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் மணி, மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

 

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஐ.ஐ.டி. பயிற்சி

Print PDF

தினமணி 07.10.2010

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஐ..டி. பயிற்சி

சென்னை கிண்டியில் உள்ள ஐ..டி.யில் (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) புதன்கிழமை தொடங்கிய தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு, நிர்வாகத்திறன் குறித்த பயிற்சி

சென்னை, அக்.6: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 200 சிறந்த மாணவர்களுக்கு ஐ..டி. பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மேலாண்மை திறன், தலைமைப் பண்பு மற்றும் நிர்வாகத் திறன் குறித்த 3 நாள் பயிற்சி முகாம் கிண்டியில் உள்ள ஐ..டி.யில் (சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) புதன்கிழமை தொடங்கியது.

இந்தப் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:

சென்னை பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இப்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள பயிற்சி முகாமில் சென்னை மாநகராட்சி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் என மொத்தம் 100 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்காக சென்னை மாநகராட்சி | 7.50 லட்சம் செலவு செய்கிறது.

இப்போது ஐ..டி. நிறுவனத்தில் பயிற்சி பெறும் ஆசிரியர்களின் திறமையால், சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளி மாணவர்களும் ஐ..டி.யில் சேரும் வாய்ப்பு வருங்காலத்தில் நிச்சயம் உருவாகும்.

சென்னை பள்ளிகளில் 10 ஆற்றல்சார் பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டு 9-ம் வகுப்பிலும், 10-ம் வகுப்பிலும் சிறந்து விளங்கும் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள எஃப்..ஜே... என்ற நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது என்றார் மா.சுப்பிரமணியன்.

..டி. சென்னை இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம், வருவாய் மற்றும் நிதி) அனுஜார்ஜ், கல்வி அலுவலர் எம்.மாதேவ பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ஐஐடியில் உயர்கல்வி படிக்க சென்னை பள்ளி மாணவர் 200 பேருக்கு சிறப்பு பயிற்சி மாநகராட்சி புதிய நடவடிக்கை

Print PDF

தினகரன் 07.10.2010

ஐஐடியில் உயர்கல்வி படிக்க சென்னை பள்ளி மாணவர் 200 பேருக்கு சிறப்பு பயிற்சி மாநகராட்சி புதிய நடவடிக்கை

சென்னை, அக்.7: ‘ஐஐடியில் சேர்ந்து உயர்கல்வி படிக்க சென்னை பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதுஎன்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, கிண்டி ஐஐடியில் உள்ள மேலாண்மைத் துறை மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை ஐஐடியில் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது மேயர் பேசியதாவது: தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, சென்னை பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், வளர்ந்து வரும் கல்வி மாற்றங்களுக்கு ஏற்ப சென்னை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மேலாண்மை திறன், தலைமை பண்பு மற்றும் நிர்வாகத் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு, ஐஐடியில் உள்ள மேலாண்மை துறை மூலம் 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக ரூ.7.5 லட்சம் செலவிடப்படுகிறது. அடுத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 121 பேருக்கு ரூ.10 லட்சம் செலவில் இதுபோன்ற பயிற்சி அளிக்கப்படும்.

சென்னை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்நிலை கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, உயர்கல்வி பெற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக 9, 11ம் வகுப்புகளில் படிக்கும் திறமையான மாணவர்கள் 200 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஐஐடியில் சேருவதற்கான பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும். இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் சென்னையில் உள்ள ஐஐடியில் உயர்கல்வியில் படிக்க சென்னை பள்ளி மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்ற நல்ல செய்தி வரும். ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்னை பள்ளி மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். இவ்வாறு மேயர் பேசினார்.

ஐஐடி இயக்குனர் ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் (வரி விதிப்பு மற்றும் நிதி) அனுஜார்ஜ், கல்வி நிலைக்குழு தலைவர் ஜானகி, கவுன்சிலர் கென்னடி, மாநகராட்சி கல்வி அதிகாரி மாதேவ பிள்ளை பங்கேற்றனர்.

சென்னை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு மேலாண்மை திறன், தலைமைப் பண்பு மற்றும் நிர்வாகத்திறன் பற்றிய 3 நாள் பயிற்சி வகுப்பு ஐ..டி வளாகத்தில் நேற்று தொடங்கியது. மேயர் மா.சுப்பிரமணியன், ..டி இயக்குனர் ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் அனுஜார்ஜ், கல்வி அலுவலர் மாதவப்பிள்ளை பங்கேற்றனர்.

 


Page 37 of 111