Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி

Print PDF

தினமலர் 29.09.2010

மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி

சென்னை: மாநகராட்சி, கூடுதலாக மேலும் 40 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை துவங்க திட்டமிட்டுள்ளது.மாநகராட்சியின் 28 தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி நடத்தப்பட்டு வருகிறது. இதில், 1,040 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆங்கில வழிக் கல்வியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுவதால், கூடுதலாக எருக்கஞ்சேரி, படேல் நகர், திரு.வி.., நகர், சி..டி., நகர், ஈக்காட்டு தாங்கல் உள்ளிட்ட 23 இடங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளிலும், நரசிங்கபுரம், புது காமராஜ் நகர், டிரஸ்ட் புரம் எம்.ஜி.ஆர்., நகர், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 17 நடுநிலைப் பள்ளிகளிலும் ஆங்கில வழி பாடப் பிரிவுகளை துவங்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வரும் விஜயதசமி அன்று, இந்த பள்ளிகளில் ஆங்கில பாடப் பிரிவுகள் துவங்கப்படுகின்றன. இதற்கு நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

மாநகராட்சி பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் சேலம் மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 24.09.2010

மாநகராட்சி பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் சேலம் மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

சேலம்: சேலம் மாநகராட்சி பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் எட்டு, உயர் நிலைப்பள்ளிகள் மூன்று ஆக 11 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் மற்றும் இதர உபகரணங்கள் வேண்டும் என்று பள்ளிகளில் இருந்து மாநகராட்சிக்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டது.

கடிதங்களை பரிசீலனை செய்த மாநகராட்சி நிர்வாகம் கம்ப்யூட்டர் மற்றும் இதர உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளது. மாநகராட்சி பள்ளிகளுக்கு 20 லேப்-டாப், 130 கம்ப்யூட்டர், ஐந்து பிரிண்டர், 130 சேர், டேபிள், எட்டு யுபிஎஸ், நான்கு ஜெராக்ஸ் மிஷின், ஒரு குளிர்சாதனப்பெட்டி, 10 எல்.சி.டி., புரொஜக்டர், ஐந்து டிஜிட்டல் கேமரா, ஐந்து எம்.எம்., மைக், ஒரு ஆம்பளிபையர், 18 இன்ஸ்ட்ரெக்டர் ஒயிட் போர்டு ஆகியவற்றை வழங்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி கல்வி நிதியில் இருந்து உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

 

மாநகராட்சிப் பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணி: மேயர் நேரில் ஆய்வு

Print PDF

தினமணி 08.09.2010

மாநகராட்சிப் பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணி: மேயர் நேரில் ஆய்வு

மதுரை,செப்.7: மதுரை கிருஷ்ணாபுரம் காலனி மாநகராட்சிப் பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணிகளை மேயர் தேன்மொழி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 13 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனை நேரில் பார்வையிட்ட மேயர், கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம்.மன்னன் ஆகியோரும் அவருடன் ஆய்வில் கலந்துகொண்டனர்.

பூங்காவில் ஆய்வு: சிங்கராயர் காலனிக்குச் சென்று அங்குள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, மற்றும் மாநகராட்சி பூங்கா ஆகியவற்றை மேயர் தேன்மொழி பார்வையிட்டார்.

ஆரம்பப் பள்ளியை தரம் உயர்த்துவது குறித்தும் பூங்காவில் மின்சார வசதி, நடைபாதை, சுற்றுச்சுவர் அமைப்பது பற்றியும் மேயர் ஆலோசனை நடத்தினார். இதûனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மதுரை வடக்கு மணடலத்திற்கான குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனுக்கள் பெற்றார்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. சொக்கநாதபுரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், ஞாயிற்றுக்கிழமை சந்தையிலுள்ள கடையை உண்மையான வாரிசுதாரருக்கு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மேயர் உத்தரவிட்டார். மண்டலத் தலைவர் க.இசக்கிமுத்து, மாமன்ற உறுப்பினர்கள் அமுதா, உமா, நீலமேகம், தலைமைப்பொறியாளர் சக்திவேல்,கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.விஜயகுமார், நகர்நல அலுவலர் சுப்பிரமணியன், நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையர் (வடக்கு) ராஜகாந்தி,கல்வி அலுவலர் வைத்திலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன், நிர்வாகப் பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


Page 39 of 111