Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளிக்கு ரூ.13 லட்சத்தில் கட்டடம்

Print PDF

தினமலர் 08.09.210

மாநகராட்சி பள்ளிக்கு ரூ.13 லட்சத்தில் கட்டடம்

மதுரை : மதுரை கிருஷ்ணாபுரம்காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடடம் கட்டப்படுகிறது. இப்பணிகளை நேற்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், துணை மேயர் மன்னன் ஆய்வு செய்தனர்.

சிங்கராயர் காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்துவது குறித்தும், அப்பகுதியில் பூங்கா, மின்வசதி, நடைபாதை, சுற்றுச்சுவர் அமைப்பது குறித்தும் மேயர் ஆலோசினை நடத்தினார்.

பின் மாநகராட்சி அலுவலகத்தில் வடக்கு மண்டல மக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. சொக்கநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், ஞாயிற்றுக் கிழமை சந்தையில் உண்மையான வாரிசுதாரருக்கு கடை ஒதுக்கீடு செய்யக் கோரியும் மனுக்கள் கொடுக்கப் பட்டன. இவற்றின் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில் தலைமைபொறியாளர் சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் விஜய குமார், நகர்நல அலுவலர் சுப்பிர மணியன், நகரமைப்பு அலுவலர் வைத்தியலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், நிர்வாக பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

நகராட்சி பள்ளியில் குழந்தைகள் அறிவியல் விழா

Print PDF

தினகரன் 06.09.2010

நகராட்சி பள்ளியில் குழந்தைகள் அறிவியல் விழா

கடலூர், செப். 6: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் கிளை சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு துளிர் இல்ல குழந்தைகளுக்கான அறிவியல் திருவிழா நிகழ்ச்சி கடலூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.

அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரராசு தலைமை தாங்கினார். துளிர் இல்லப்பொறுப்பாளர்கள் ரஜினி, ஆனந்த், உதயேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தனர்.

சிறப்பு விருந்தினராக அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன் கலந்துகொண்டு அறிவியல் உரை நிகழ்த்தினார்.

நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உதய குமார்சாம், முதுகலை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மந்திரமா? தந்திரமா? காகிதக்கலை, கணக்கும் இனிக்கும், எளிய அறிவியல் சோதனைகள், அறிவியல் பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக நடத்தப்பட்டன.

கடலூர் நகரில் செயல்படும் பல்வேறு துளிர் இல்லத்தை சேர்ந்த 100 குழந்தைகள் மற்றும் மாணவர்கள் உட்பட அறிவியில் இயக்கத்தை சேர்ந்த வைத்திலிங்கம், சின்னத்துரை, சந்தானம், அய்யாதுரை மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

 

சென்னையை போல் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய பள்ளிகளின் பெயர் மாற்றப்படுமா?

Print PDF

தினகரன் 04.09.2010

சென்னையை போல் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய பள்ளிகளின் பெயர் மாற்றப்படுமா?

சிவகங்கை, செப். 4: சென்னை மாநகராட்சியை போல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றிய பள்ளிகளின் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளை போல், மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பெயர்கள் அனைத்தும் சென்னை பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளிகள், சென்னை மேல்நிலை பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளிகள், சென்னை உயர்நிலை பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளிகள், சென்னை நடுநிலை பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளிகள், சென்னை தொடக்க பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளிகள், சென்னை மழலையர் பள்ளிகளாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளின் பெயர்களையும் மாற்றம¢செய்ய வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக கல்வித்துறை பிறப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ கூறும்போது,‘ மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பது பொதுமக்களுக்கு தரக்குறைவாக தோன்றுவதால், பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். மக்களின் எண்ணத்தை மாற்றும் வகையில் சென்னையில் உள்ள பள்ளிகளின் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் பெயர்களை மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,‘ என்றார்.

 


Page 40 of 111