Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

Print PDF

தினமலர் 02.09.2010

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

கடலூர்: கடலூர் முதுநகர் சங்கரன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் குமாரவேல் தலைமை தாங்கினார். கடலூர் வட் டார வளமைய மேற் பார் வையாளர் ஆஷா கிறிஸ்டி எமரால்ட் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் கிராம கல்விக்குழுத் தலைவர் கவுன்சிலர் செந்தில், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆனந் தநாராயணன், ஆரோக்கியராஜ், இணைப்பு பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மற் றும் ஆசிரியர்கள், பெற் றோர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.

 

சென்னையில் செயல்படுத்தியது போல் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய பள்ளிகள் பெயர் மாற்றப்படுமா?

Print PDF

தினகரன் 02.09.2010

சென்னையில் செயல்படுத்தியது போல் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய பள்ளிகள் பெயர் மாற்றப்படுமா?

ராமநாதபுரம், செப். 2: சென்னை மாநகராட்சியை போல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றிய பள்ளிகளின் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளை போல், மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பெயர்கள் அனைத்தும் சென்னை பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளிகள், சென்னை மேல்நிலை பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளிகள், சென்னை உயர்நிலை பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளிகள், சென்னை நடுநிலை பள்ளிகளாகவும், சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளிகள், சென்னை தொடக்க பள்ளிககளாகவும், சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளிகள், சென்னை மழலையர் பள்ளிகளாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளின் பெயர்களையும் மாற்றம¢செய்ய வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக கல்வித்துறை பிறப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ கூறும்போது,‘ மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பது பொதுமக்களுக்கு தரக்குறைவாக தோன்றுவதால், பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். மக்களின் எண்ணத்தை மாற்றும் வகையில் சென்னையில் உள்ள பள்ளிகளின் பெயர்கள் அனைத் தும் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் பெயர்களை மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,‘ என்றார்.

 

மாநகராட்சி நடத்தும் சமுதாய கல்லூரிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள்

Print PDF

தினகரன் 02.09.2010

மாநகராட்சி நடத்தும் சமுதாய கல்லூரிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள்

சென்னை, செப்.2: மாநகராட்சி நடத்தும் சமுதாய கல்லூரிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் ஏழுகிணறு, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், ஆழ்வார்ப்பேட்டை ஆகிய 4 இடங்களில் சமுதாய கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இந்த சமுதாய கல்லூரிகளில் கணினி நுட்பவியல், செவிலியர் உதவியாளர், ரொட்டி தயாரித்தல், பி.பி.., டெய்லரிங், எலக்ட்ரீஷியன், செல்போன் ரிப்பேர் செய்தல், கஸ்டமர் சர்வீஸ் அண்டு சேல்ஸ், ஆஸ்பிட்டாலிட்டி சர்வீஸ் ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர் கல்வி பெற இயலாத சூழ்நிலையில் உள்ளவர்கள், பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு தொழிலில் குறுகிய கால பயிற்சி இந்த சமுதாய கல்லூரிகள் மூலம் அளிக்கப்படுகிறது. இப்படி பயிற்சி பெறுபவர்களுக்கு பெரிய நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் பெற்றுத் தரப்படுகிறது.

மேலும் மூன்று இடங்களில் சமுதாய கல்லூரிகள் விரிவு படுத்தப்படவுள்ளது. எனவே, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், நல்ல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரவும் 7 சமுதாய கல்லூரிகளை ஒருங்கிணைப்பதற்கும் வடசென்னை, தென்சென்னைக்கு தலா ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான தீர்மானம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 


Page 41 of 111