Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

இஸ்ரோவை பார்வையிட மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் 5 பேர் தேர்வு

Print PDF

தினமணி 27.08.2010

இஸ்ரோவை பார்வையிட மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் 5 பேர் தேர்வு

மதுரை, ஆக. 26: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவை பார்வையிட, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் 10-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 5 மாணவிகளான டி.ஜி. வித்யா, ஆர். செல்வலட்சுமி, ஆர். மோனிகா, எச். ஹீமாயா, டி. லட்சுமிபிரியா ஆகியோர், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவியல் தொழில்நுட்ப நுணுக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காக, விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை, மாநகராட்சி நிர்வாகம் செய்து வருவதாக, மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

 

மாநகராட்சி பள்ளிகளில் 39 ஆசிரியர்கள் நியமனம்

Print PDF

தினமலர் 27.08.2010

மாநகராட்சி பள்ளிகளில் 39 ஆசிரியர்கள் நியமனம்

மதுரை:மதுரை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக இருந்த 39 பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கமிஷனர் செபாஸ்டின் கூறுகையில், ""மதுரை மாநகராட்சியில் 12 உயர்நிலை, 12 நடுநிலை, 14 மேல்நிலைப் பள்ளிகள், 29 துவக்கப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 பேர் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு மூலம் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார். இந்நிகழ்ச்சியில் கல்விக்குழு தலைவர் பொன்னுத்தாய், துணைகமிஷனர் தர்ப்பகராஜ், கல்வி அலுவலர் வைத்தியலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 27 August 2010 10:26
 

அணுமின் நிலையம் செல்ல மாநகராட்சி மாணவிகள் தேர்வு

Print PDF

தினமலர் 27.08.2010

அணுமின் நிலையம் செல்ல மாநகராட்சி மாணவிகள் தேர்வு

மதுரை:ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள அணுமின்நிலையத்தின் அறிவியல் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கமிஷனர் செபாஸ்டின் கூறுகையில்,"" மாநகராட்சியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஐந்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.ஜி. வித்யா, ஆர். செல்வலட்சுமி, ஆர். மோனிகா, எச். ஹீமாயா, டி. லட்சுமிப்ரியா ஆகியோர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள அணுமின்நிலையத்திற்கு செல்கின்றனர்,'' என்றார்.

 


Page 42 of 111