Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நகராட்சிப் பள்ளிகளில் விழா நடத்த கட்டணம் நிர்ணயம்

Print PDF

தினமணி 26.08.2010

நகராட்சிப் பள்ளிகளில் விழா நடத்த கட்டணம் நிர்ணயம்

தஞ்சாவூர், ஆக. 25: தஞ்சாவூர் நகராட்சிப் பள்ளிகளில் விழா நடத்த புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் நகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளில் விடுமுறை நாள்களில் ஆண்டு கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வேண்டுவோரிடமிருந்து நாள் ஒன்றுக்கு வாடகை கட்டணமாக | 750-ம், மின் கட்டணம் பயன்பாட்டிற்கான தொகை | 250-ம் வசூலித்துக் கொண்டு பள்ளிகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது.

இதற்கான தீர்மானம் வியாழக்கிழமை நடைபெறும் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது. இதன்மூலம் நகராட்சிப் பள்ளிகளில் வருவாயும், அதைக் கொண்டு சிறிய அளவிலான பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை பள்ளிகளில் கணித ஆய்வகம் திறப்பு

Print PDF

தினகரன் 26.08.2010

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை பள்ளிகளில் கணித ஆய்வகம் திறப்பு

சென்னை, ஆக.26: கணித சூத்திரங்கள், சமன்பாடுகள் போன்றவற்றை செயல்வழி மூலம் கற்றுக்கொள்வதற்காக மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் கணித ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில், கணித பாடத்தின் சூத்திரங்கள் மற்றும் இதர சமன்பாடுகள் போன்றவற்றை மாணவர்களுக்கு நேரடியாக ஆசிரியர்கள் கற்பிப்பதை விட கணினி மூலம், ஒலி, ஒளி வடிவில் பார்த்து, கேட்டு செய்முறை மூலம் மாணவர்கள் பயிற்சி எடுத்தால் எளிதில் பதிந்துவிடும். இதனால் மாணவர்களின் கற்கும் திறன் மேம்படும். ஆகவே வடசென்னை, தென்சென்னையில் தலா ஒரு கணித ஆய்வகம்அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

அதன்படி, சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கணித ஆய்வகத்தைமேயர் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

மாநகராட்சி நடத்தும் பள்ளிகளில் 97 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரையில் 40 ஆயிரம் மாணவ&மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்காக கணித ஆய்வகம்சைதாப்பேட்டையிலும், வடசென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கணித ஆய்வகத்தில் உள்ள உபகரணங்கள் உதவியுடன் செயல் வழி மூலம் கணித சூத்திரங்கள், சமன்பாடுகள் போன்றவற்றை மாணவ&மாணவிகள் எளிதில் கற்கமுடியும். இப்படி கற்கும் போது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இது போன்ற கணித ஆய்வகத்தின் மூலம் பயிற்சி பெறும் போது கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இத்திட்டத்தின் மூலம் 6முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவ&மாணவிகள் 1,500 பேர் பயன்பெறுவர். இதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தபிறகு மற்ற பள்ளிகளுக்கும் இது போன்ற ஆய்வகம் அமைக்கப்படும்.

இந்த ஆய்வகத்தில் உபகரணங்களுடன் இராமானுஜம் அருங்காட்சியகம் மற்றும் கணித கல்வி மையத்தினர் மூன்றாண்டு பயிற்சி அளிப்பர். இதற்காக ரூ4.17 லட்சம் செலவிடப்படுகிறது. ஆய்வகத்தில் மாணவர்கள் அமர்வதற்காக சுழல் நாற்காலி, மேஜை உள்ளிட்ட தளவாடங்கள் ரூ3 லட்சத்து 89,400க்கு வாங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அழகான சூழலில் அமர்ந்து பயிற்சி பெறும் வகையில் ஆய்வக அறையில் தரையில் டைல்ஸ் ஒட்டியும், மின்விசிறிகள் வைத்தும், சுவர்களில் வண்ணம் தீட்டியும் அழகுபடுத்தப்பட்டுள்ளது. கணித மேதைகளின் உருவப்படங்கள் மற்றும் அவர்களது வரலாறு அடங்கிய லேமினேஷன் போட்டோக் களும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மேயர் பேசினார்.

மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, துணை ஆணையர் (கல்வி) பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

மாநகராட்சி பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும்: மேயர்

Print PDF

தினமலர் 26.08.2010

மாநகராட்சி பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும்: மேயர்

சென்னை : சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கணித ஆய்வகத்தை மேயர் சுப்ரமணியன் திறந்து வைத்தார். சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 9 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில், கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேயர் சுப்ரமணியன் நேற்று திறந்து வைத்து கூறியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, நிர்வாகம் புது வகையான முன்மாதிரி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 97 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 6, 7, மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பயன் பெறும் வகையில் கணித ஆய்வகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் பள்ளியிலும், வடசென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 40 ஆயிரம் மாணவ, மாணவியரில் 1,500 பேர் பயன் பெறும் வகையில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கணித ஆய்வகத்தின் மூலம் கற்றல் திறன், ஈடுபாடு, ஆர்வம் ஏற்படும். இதனால், மாணவ, மாணவியர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 67 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு மாத காலத்திற்குள் நூலகங்கள் அமைக்கப்படும். அதற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்கும் பணி தற்போது நடக்கிறது. இவ்வாறு மேயர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, துணை கமிஷனர் (கல்வி) பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

 


Page 43 of 111