Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பத்மநாபபுரத்தில் ஊர்ப்புற நூலக கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி 10.08.2010

பத்மநாபபுரத்தில் ஊர்ப்புற நூலக கட்டடம் திறப்பு

தக்கலை, ஆக. 9: பத்மநாபபுரம் நகராட்சியில் | 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊர்ப்புற நூலக கட்டடத்தை தியோடர் ரெஜினால்டு எம்.எல்.. திறந்து வைத்தார்.

பத்மநாபபுரம் நகர்மன்றத் தலைவர் அ.ரேவன்கில் தலைமை வகித்தார். ஆணையர் செல்லமுத்து, பொறியாளர் சனல்குமார், பொதுப்பணி மேற்பார்வையாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் பிச்சையம்மாள் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர் அனந்தபாய் தங்கச்சி, வாசகர் வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வாசகர் வட்ட துணைத் தலைவர் சிபிமைக்கின் வரவேற்றார். ஊர்ப்புற நூலகர் சித்ரா நன்றி கூறினார்.

 

கைப்பந்து போட்டி மாநகராட்சி பெண்கள் பள்ளி வெற்றி

Print PDF

தினகரன் 10.08.2010

கைப்பந்து போட்டி மாநகராட்சி பெண்கள் பள்ளி வெற்றி

கோவை, ஆக. 10:கோவை பிஷப் தாமஸ் அக்வினாஸ் கைப்பந்து மற்றும் பிஷப் அம்புரோஸ் நினைவு கால்பந்து போட்டிகள் ஒத்தக்கால் மண்டபம் கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆன்டனி பெர்னாண்டஸ் வரவேற்றார். கல்லூரி தாளாளர் குழந்தைராஜ் முன்னிலை வகித்தார். சுங்கத்துறை ஆணையர் ராஜேந்திரன் பரிசு வழங்கினார். கைப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பிஷப்தாமஸ் அக்வினாஸ் சுழற்கோப்பை, மற்றும் காசோலை வழங்கப்பட்டது. ஆண் கள் கைப்பந்து போட்டியில் பொள் ளாச்சி என்.ஜி.என்.ஜி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்பரிசு பெற் றது. பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதல் பரிசு பெற்றது.

பள்ளி, பாலிடெக்னிக் அள விலான கால்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பிஷப் அம்புரோஸ் நினைவு சுழற்கோப்பை மற்றும் காசோலை வழங்கப்பட்டது.

பள்ளி அளவிலான போட்டியில் கோவை சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பெற்றது. பாலிடெக்னிக் அளவிலான போட்டியில் கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பெற்றது.

 

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறமையை ஆய்வு செய்ய முடிவு

Print PDF

தினகரன் 10.08.2010

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறமையை ஆய்வு செய்ய முடிவு

மும்பை,ஆக.10: மும்பை மாநகராட்சி நிர்வாகம் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் படிப்பு திறமையை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சரியாக படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அவர்களால் எழுத படிக்க கூட முடிவ தில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் மாணவர்களின் திறமையை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற் காக மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப் பட்டு அவர்களின் திறமை கண் டறியப்படும்.

இதில் மராத்தி, இந்தி மற்றும் ஆங்கில மீடிய பள்ளிகள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு எந்த அளவுக்கு கற்கும் தன்மை இருக்கிறது என்பதை கணக் கிட்டு அதனை மேம்படுத்த இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக மாநகராட்சி கல்வி அதிகாரி ஜாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் நியமித்திருக்கிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.

 


Page 46 of 111