Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பாளையில் பழுதடைந்த கட்டடத்தில் செயல்படும் மாநகராட்சி பள்ளி

Print PDF

தினமலர் 09.08.2010

பாளையில் பழுதடைந்த கட்டடத்தில் செயல்படும் மாநகராட்சி பள்ளி

திருநெல்வேலி:பாளை., மனகாவலம் பிள்ளை மருத்துவமனை தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பழுதடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வருவதால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாளை., மனகாவலம் பிள்ளை மருத்துவமனை தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கான கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் பள்ளி சுவற்றில் உள்ள சன்சேடுகளின் சிமென்ட் பெயர்ந்து கம்பிகள் தெரிவதோடு, ஒரு சில இடங்களில் விரிசல் காணப்படுகிறது. இங்கு மின்சாரம், குடிநீர் வசதிகள் இருந்தபோதிலும், பாத்ரூமிற்கு தண்ணீர் வசதியில்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளியின் பின்பகுதியில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது. மனகாவலம் பிள்ளை மருத்துவமனை தெரு மேடான பகுதியாக உள்ளதால் மழை காலங்களில் பள்ளிக்குள் கழிவு நீர் புகுந்து விடுகிறது. பள்ளி மாணவர்கள் சுகாதாரமற்ற சூழலில் கல்விகற்கும் சூழல் ஏற்படுகிறது. மாணவர்கள் விளையாடுவதற்காக பள்ளியின் பின் பகுதியில் மாநக ராட்சிநிர்வாகம் இடம் ஒதுக்கியுள்ளது. இந்த இடத்தை மாணவர்கள் மைதானமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு புதர்கள் மற்றும் கற்கள் நிறைந்து காணப்படுகிறது. சேதமடைந்த பள்ளி கட்டடத்தை பழுதுபார்ப்பதோடு, மைதானத்தை காலதாமதமின்றி செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கூறுகையில் இந்த பள்ளியில் பழுதடைந்த சன்சேடுகளை நீக்கி,புதிதாக கட்டவும், பாத்ரூமிற்கு தண்ணீர் வசதி மற்றும் காம்பவுண்ட் சுவரை உயர்த்தி கம்பிவேலி அமைக்கவும் பாளை மண்டல மாநகராட்சி உதவி கமிஷனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் பேரில் பள்ளி கட்டடம் பழுதுபார்க்க மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என்றார்.

 

மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைப்பு

Print PDF

தினகரன் 06.08.2010

மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைப்பு

சென்னை, ஆக.6: பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் கணித சூத்திரங்கள் (திஷீக்ஷீனீuறீணீ) மற்றும் இதர சமன்பாடுகள் (ணிஹீuணீtவீஷீஸீs) போன்றவற்றை ஆசிரியர்கள் நேரடியாக மாணவ&மாணவிகளுக்கு சொல்லி தருவதைவிட கணினி மூலம் ஒலி&ஒளி வடிவில் பார்த்து, கேட்டு, படித்தால் மனதில் எளிதில் பதிந்துவிடும். கணித ஆய்வகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்களின் கற்றல் திறன், ஆர்வம், எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை போன்ற சிறப்புகளை பெறமுடியும்.

இதைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சென்னைப் பள்ளிக ளில் கணித ஆய்வகம்’ 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் உருவாக்கி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

வடசென்னையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி, தென் சென்னையில் சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.

இந்த 2 பள்ளிகளிலும் 40 அடி நீளத்திலும் 20 அடி அகலத்திலும் கணித ஆய்வகத்திற்கான வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் ரூ4 லட்சம் செல வில் அமைக்கப்படவுள்ளது. 6முதல் 8ம் வகுப்பு வரையிலான 1,500 மாணவ&மாணவிகளுக்கு 3 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.

தனியார் நிறுவனம் வழங்கும் இந்த பயிற்சிக்காக ரூ4.17 லட்சம் செலவிடப்படவுள்ளது. இதற்கு மாநகராட்சி மன்ற கூட்டம் அனுமதி வழங்கி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மாதிரி கணித ஆய்வகம்:

அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி கணித ஆய்வகம்உள்ளது. தமிழகம் முழுவதும் 100 அரசு பள்ளிகளில் கணித ஆய்வகத்திற்கான பயிற்சி பொருட்கள் கொள்முதல் செய்யவும் தமிழக அரசின் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

Print PDF

தினமணி 02.08.2010

கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

பட்டுக்கோட்டை, ஆக. 1: தமிழகத்திலுள்ள ஊராட்சி, நகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் மாறிவரும் காலத்துக்கேற்ப கல்வியின் தரம் உயரவில்லை. இதனால்தான் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட மிகப் பெரிய அறிஞர்கள் கிராமத்திலுள்ள ஒன்றியப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எட்டிப் பிடித்தனர். ஆனால், தற்போது ஒன்றிய, நகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படுவதில்லை என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். இதனால், நகர்ப் பகுதிகளில் உள்ள ஆங்கில வழி பள்ளியில் தங்கள் குழந்தைகள் படிப்பதையே அவர்கள் விரும்புகின்றனர்.

இதில் ஓரளவு நியாயம் இருப்பதாக கூறும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு முடித்து 6-ம் வகுப்பில் சேரும் நிலையிலும் பெரும்பாலான மாணவ- மாணவிகளுக்கு தமிழைக்கூட சரளமாகப் படிக்கத் தெரியவில்லை. எளிமையான சொற்களை எழுதத் தெரியவில்லை. கணிதம், ஆங்கிலப் பாடங்களின் நிலையோ மிகவும் மோசம்.

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்களைவிட திறமை குறைந்தவர்கள் அல்லர். ஆங்கில மழலையர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர், ஆசிரியர் பயிற்சி பெறாதவர்கள். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைப் போல அவர்களுக்கு பணியிடைப் பயிற்சிகள் எதுவும் அளிக்கப்படுவதில்லை. கற்றலின் இனிமை போன்ற பயிற்சிகளும் அவர்களுக்கு இல்லை.

ஆங்கிலப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை அப் பள்ளி நிர்வாகம் கெடுபிடி செய்து வேலை வாங்குகிறது. இதனால், அங்கு கல்வித் திறன் பேசப்படுகிறது.

ஆனால், ஒன்றிய, நகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறன் மெச்சும்படியாக இல்லை. இதற்குக் காரணம், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை கெடுபிடி செய்து வேலை வாங்க கல்வி அலுவலர்கள் முனைவதில்லை.

ஒன்றியப் பள்ளிகளுக்கான உதவிக் கல்வி அலுவலரும், கூடுதல் உதவிக் கல்வி அலுவலரும் தமக்குக் கீழுள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல், பொது வைப்பு நிதியிலிருந்து முன் பணம் பெற்றுத் தருதல், ஓய்வூதியம் பெற்றுத் தருதல் போன்ற பணிகளுக்கே முன்னுரிமை தர வேண்டியுள்ளது. இதனால், ஒன்றியப் பள்ளிகளை அவர்கள் ஆய்வு செய்வது குறைந்து வருகிறது.

இடைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, ஒரு வருவாய் மாவட்டத்துக்கு 2 அல்லது 3 மாவட்டக் கல்வி அலுவலர்களும், வருவாய் மாவட்ட அளவில் ஒரு முதன்மைக் கல்வி அலுவலரும் உள்ளதால், அவர்களின் பள்ளி மேற்பார்வைப் பணி சிறப்பாக உள்ளது.

ஆனால், தொடக்கக் கல்வி தனி இயக்ககமாக உள்ளதால், வருவாய் மாவட்ட அளவில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர்தான் உள்ளார். அவருக்குக் கீழே ஒரு ஒன்றியத்துக்கு இரு உதவிக் கல்வி அலுவலர்கள் உள்ளனர். ஆனால், பள்ளிகளின் எண்ணிக்கையோ அதிகம். இதனால் அவர்களால் ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் மேற்பார்வைப் பணியைச் சிறப்பாக செய்ய முடிவதில்லை.

இடைநிலைக் கல்விக்கு உள்ளது போல இரு தொடக்கக் கல்வி அலுவலர்கள் இருந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். மேலும், தொடக்கக் கல்வியை இடைநிலை, மேல்நிலை கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் வகுப்பறை, குடிநீர் வசதி, இருக்கை, கழிப்பறை போன்ற வசதிகள் செய்யப்பட்டு பள்ளிகளின் தோற்றம் மாறியுள்ளது. ஆனால், அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் மட்டும் உயரவில்லை.

இந்தப் பள்ளிகள் மீண்டும் பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, நகர்ப்புற பள்ளிகளுக்கு இணையாக கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பாடத் திட்டத்தை மாற்றுவது, புதிய கற்பித்தல் நுட்பம் அறிமுகப்படுத்துவது ஆகியன மட்டும் போதாது. ஆசிரியர்களின் போக்கிலும் மாற்றம் தேவை.

ஆசிரியர் பணி தொழில் அல்ல, தொண்டு என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும். தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் நடைமுறையில் இருப்பதைப் போல ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும் பள்ளி முடிந்த பிறகு கூடுதலாக 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்.

ஒன்றியப் பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்யும் கூடுதல் மேலாண்மைக் கட்டமைப்பும், நிர்வாக சீர்திருத்தமும்தான் தற்போதைய அவசியத் தேவை. இதை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

கிராம அளவில் தொண்டுள்ளம் கொண்ட இளைஞர்கள், ஊராட்சித் தலைவர்கள் பள்ளி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஓய்வு பெற்ற கல்வியாளர்களும் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இவற்றைச் செய்தால் ஒன்றியப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரமும் நிச்சயம் உயரும்.

 


Page 48 of 111