Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நகராட்சிப் பள்ளி மாணவிக்குப் பரிசு

Print PDF

தினமணி 30.07.2010

நகராட்சிப் பள்ளி மாணவிக்குப் பரிசு

மயிலாடுதுறை, ஜூலை 29: தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். தையல்நாயகிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் உயர் கல்வி படிப்பிற்க்கான செலவையும் உள்ளாட்சி நிர்வாகமே ஏற்கும் என்ற சான்றிதழையும் தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் நகர்மன்றத் தலைவர் ஜெ.லிங்கராஜன், பள்ளித் தலைமையாசிரியர் த. முருகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

 

படைப்பாற்றல் கல்வி பயிற்சி

Print PDF

தினகரன் 28.07.2010

படைப்பாற்றல் கல்வி பயிற்சி

கரூர், ஜூலை 28: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார் பில் கரூர் நகராட்சி மேல்நி லைப் பள்ளியில் எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி பயிற்சி, கரூர் வட்டார வளமைய பயிற்சி நடைபெற் றது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 84 பேர் முதல் கட் டமாக பயிற்சி பெற்றனர். எளிமைபடுத்தப்பட்ட படை ப்பாற்றல் கல்வி பயிற்சியில் அறிமுகம், படித்தல், கருத்து வரைப்படம், தொகுத்தல், வலுவூட்டுதல் மற்றும் மதிப்பிடுதல் ஆகிய திறன்கள் பற் றிய பயிற்சி 2 நாட்கள் நடைபெற்றது.

பயிற்சியை ஒருங்கிணைப்பாளர்கள் சிவஞானம், பரமானந்தம், மேற்பார்வையாளர் ருங்மாங்கதன், மாவ ட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாபு, அன்பு, வெங்க டேஷ், சுந்தரராஜன் ஆகி யோர் பார்வையிட்டனர்.

 

சிறப்புப்பள்ளி புதிய கட்டடம் திறப்பு

Print PDF

தினகரன் 27.07.2010

சிறப்புப்பள்ளி புதிய கட்டடம் திறப்பு

திருவாரூர், ஜூலை 27: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி மேலபனங்காட்டாங்குடியில் மனோலயம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி புதிய கட்டட திறப்பு விழா கலெக்டர் சந்திரசேகரன் தலைமையி நடைபெற்றது. தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் நிதி உதவியில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கட்டடத்தை பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் திறந்து வைத்து, 66 சென்ட் நிலம் தந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கட்டடம் கட்டித்தந்த கல்வி புரவலர் பதுருதீனை பாரா ட்டினார். தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வாரியத்தை தொடங்கி அதனை தன்வச ம் வைத்து பல திட்டங்களை தீட்டி வருகிறார் என்றார். ஜபருல்லாகான் வரவேற் றார். நகர் மன்ற உறுப்பினர் ஜெயராஜ், தொலை தொட ர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் ரகு நாதன், மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் பேசினர். மனோலயம் பள்ளி நிர்வாகி முருகையன் நன்றி கூறினார்.

 


Page 49 of 111