Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

40 பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி

Print PDF

தினமலர் 21.07.2010

40 பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி

கோவை, ஜூலை 21: கோவை மாநகராட்சியில், 40 பள்ளிகளுக்கு 80 லட்ச ரூபாய் செலவில் மேஜை, நாற்காலி பெறப்பட்டது.

கோவை மாநகராட்சியின் கட்டுபாட்டில் 45 ஆரம்ப பள்ளி உட்பட 85 பள்ளி செயல்படுகிறது. இதில் ஆரம்ப பள்ளி தவிர, 40 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு 80 லட்ச ரூபாய் செலவில் மேஜை, நாற்காலி வாங்கப்பட்டது. அரசு நிறுவனமான டான்சியிலிருந்து நான்கு பேர் அமரும் வகையில், இரட்டை மேஜை நாற்காலி 449 760 வாங்கப்பட்டது. இது தவிர, ஆசிரியர்களுக்கு 449 மேஜை, 460 நாற்காலி பெறப்பட்டது. பள்ளியில் பொதுமக்கள் உட்கார வசதியாக 170 நாற்காலி (மூன்று பேர் அமரும் வகையில்) பெறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேஜை, நாற்காலிகளை கோவை மாநகராட்சி கல்வி, பூங்கா குழு தலைவர் கல்யாணசுந்தரம், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, கவுன்சிலர்கள் செந்தில்குமார், மீனா, விஜயலட்சுமி, சிவகாமி உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர். மேஜை, நாற்காலி தரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி கல்வி மற்றும் பூங்கா குழுவினர், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 65, 67, 68, 64, 17, 72 வார்டுகளில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை தரமாக நடத்தவேண்டும், அனைத்து பூங்காக்களிலும் நிழல் தரும் மரங்களை அதிகமாக நடவேண்டும், மூலிகை தாவரங்களை அதிகளவு நட்டு வளர்க்கவேண்டும். பூங்காக்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் செய்யவேண்டும் என அதிகாரிகளை கல்வி குழு தலைவர் கல்யாணசுந்தரம் கேட்டு கொண்டார்.

 

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

Print PDF

தினமணி 20.07.2010

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

திருநெல்வேலி, ஜூலை 19: திருநெல்வேலி மாநகராட்சி பள்ளியில் பயின்று அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் தியாகி எம்.எஸ். மகாராஜபிள்ளையின் நினைவு நாளையொட்டி, திருநெல்வேலி புறநகர் சுழற்சங்கமும், மகாராஜபிள்ளை சிலை அமைப்புக் குழுவும் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு, குழுவின் தலைவர் ச. மேகலிங்கம் தலைமை தாங்கினார்.

சுழற்சங்கத் தலைவர் ஜெ. நயினா முகமது முன்னிலை வகித்தார். விழாவில், மகாராஜ பிள்ளைக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்று அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளும், அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.

விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது. ஊக்கப் பரிசையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட சமூக நல அலுவலர் வி. உமாதேவி வழங்கினார்.

நிகழ்ச்சியில், சிலை அமைப்புக் குழுவின் கெüரவத் தலைவர் சிவ. சோமநாதன், கெüரவச் செயலர் பி.டி. சிதம்பரம், சுழற்சங்கச் செயலர் ஏ. ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பாளையங்கோட்டை சைவப் பெருமக்கள் உறவின்முறை சங்கத் தலைவர் எஸ்.. கண்ணன் வரவேற்றார். செயலர் சபரி எஸ். பாலு நன்றி கூறினார்.

 

பசுபதீஸ்வரா பள்ளியில் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம்

Print PDF

தினகரன் 30.06.2010

பசுபதீஸ்வரா பள்ளியில் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம்

கரூர், ஜூன் 30: கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் மணிராஜ், ஆண்டாள் பாலகுரு, சூர்யா கதிரவன், சுப்பன், சங்கர், ராஜகோபால், ராஜலிங்கம், நல்லமுத்து, விஜயலட்சுமி, முத்துசாமி, கமலா, வளர்மதி, பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திய முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து நகராட்சி தலைவர் வாசித்த தீர்மானத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் முத்துசாமி, கமலா, வளர்மதி, பரமசிவம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

நகராட்சிக்கு புதிதாக 75 கேவிஏ ஜெனரேட்டர் வாங்க ஒப்புதல் பெறப்பட்டது. இரட்டை வாய்க்காலில் தூர்வாரும்போது புதுத்தெருவில் இரும்பு கர்டர்கள் அகற்றப்பட்டது. புதிய இரும்பு கர்டர்கள் அமைக்க ரூ.50 ஆயிரம் கோரப்பட்டது.

பின்னர் உறுப்பினர் ஆண்டாள் பாலகுரு, வேறு நிதியில் இப்பணியை மேற்கொள்ளலாம். நகராட்சி ஆணையர் போன் அடித்தால் எடுப்பதில்லை. கூட்டத்திற்கும் அவர் வரவில்லை என்றார்.

நகராட்சி பொறியாளர் ராஜா: கரூர் நகராட்சிக்கான ரூ.25 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் தொடர்பாக இன்று சென்னையில் துணைமுதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதால் நகராட்சி ஆணையர் சென்றுள்ளார். நகராட்சி மூலம் கர்டர் அகற்றப்பட்டதால், இப்பணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.என்றார். உறுப்பினர் சூர்யா கதிரவன்: கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டுவதற்காக அங்கிருந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டது. தற்போது 5 வயதிற்கு உட்பட்ட 40 குழந்தைகள் அங்குள்ளனர். அவர்களுக்கு உரிய கட்டடம் கட்டித்தராமல் அவதிபடுகின்றனர் என்றார். நகராட்சி தலைவர்: விரைவில் இதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டிதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


Page 51 of 111