Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

கம்பம் நகராட்சிப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்: ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி 30.06.2010

கம்பம் நகராட்சிப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்: ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

கம்பம், பிப். 15: தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிக்குச் சொந்தமான 6 பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், இப் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் நகராட்சி நிதி ஒதுக்குவதாகவும் நகராட்சி தலைவர் அம்பிகா பாண்டியன் தெரிவித்தார்.

கம்பத்திலுள்ள தேரடி, மைதீன் ஆண்டவர் பள்ளி, சுங்கம் பள்ளி உள்பட 6 நகராட்சி பள்ளிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் பள்ளிகளுக்கு கல்வி நிதியைப் பயன்படுத்த அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கம்பத்திலுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர், மாணவ, மாணவியருக்குத் தனித்தனி கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

புதிதாக அனைத்து வசதிகளும் நிறைந்த கூடுதல் கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை நகராட்சி மைதீன் ஆண்டவர் பள்ளியில் ரூ.14 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டடத்தையும் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

கம்பம் நகர்மன்றத் தலைவர் அம்பிகா பாண்டியன் கூறியதாவது:

கம்பம் நகராட்சிப் பள்ளிகளில் அனைத்து வசதிகளைஉம் செய்து வருகிறோம். கல்விக்காக நகராட்சி மூலம் ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் செலவிட முடிவு செய்து பணிபுரிந்து வருகிறோம் என்றார்.

 

அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றமாநகராட்சி பணியாளர் குழந்தைகளுக்கு பாராட்டு

Print PDF

தினமலர் 30.06.2010

அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றமாநகராட்சி பணியாளர் குழந்தைகளுக்கு பாராட்டு

திருநெல்வேலி:அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற நெல்லை மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.நெல்லை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கம் சார்பில் சர்வதேச பொதுப்பணி தினம் மற்றும் 10ம் வ குப்பு, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நெல்லை ஜங்ஷனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் சீத்தாராமன், மாநில அமைப்பு செயலாளர் முத்துத்துரை, மாநில துணை தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து 12ம் ம் வகுப்பு அரசு தேர்வில் ஆயிரத்து 100 மார்க்கிற்கு மேல் பெற்ற செந்தில் விநாயகம், லீலா பிரியதர்ஷினி, முத்துலட்சுமி, ஆனந்தி, அருணச்சலம், பிரேமலதா மற்றும் பூமி மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் 400 மார்க்கிற்கு மேல் பெற்ற முத்தரசி, மகாராணி, இசக்கியம்மாள், நிர்மலா, சுரேஷ் அரவிந்த், பாத்திமா பர்தா, அருணாச்சலம், சண்முக பிரியா, சுந்தரராஜன், சரத்குமார், பவித்ரா, வீரபாகு, ஷெரீன் பர்கானா, ராஜேஷ் கண்ணா, சபரிநாதன், வேலம்மாள், சதீஸ் கணபதி ஆகியோருக்கு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், துணை மேயர் முத்துராமலிங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.விழாவில், மேலப்பாளையம் மண்டல தலைவர் முகமது மைதீன், செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் ராமச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் முத்துதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர். ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

 

தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடக்க விழா

Print PDF

தினமணி 22.06.2010

தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடக்க விழா

திருவள்ளூர், ஜூன் 21: தரம் உயர்த்தப்பட்ட திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூர் எம்எல்ஏ இ..பி.சிவாஜி, பள்ளியை தரம் உயர்த்த ரூ. 2 லட்சம் வரை நன்கொடை அளித்தவர்களின் பெயர்ப் பட்டியல் கல்வெட்டை திறந்து வைத்தார்.

அவர் பேசியது: திருவள்ளூர் நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது. இதுவரை மேல்நிலைக் கல்விக்காக இங்குள்ள அரசு நிதிநாடும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் வாசலில் காத்திருக்கும் நிலை இருந்தது. அல்லது செவ்வாப்பேட்டை, பாண்டூர், மணவாளநகர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது நகரிலேயே திறக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் திருவள்ளூருக்கு அரசு கலைக் கல்லூரி கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற 4 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன், நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், திமுக நகரச் செயலர் கா.மு.தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரகுபதி வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவி, மாவட்டக் கல்வி அலுவலர் (திருவள்ளூர்) கல்யாணசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

உதவித் தலைமை ஆசிரியர் செல்வகுமார், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 


Page 52 of 111