Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பண்ருட்டி பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினகரன் 18.06.2010

பண்ருட்டி பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பண்ருட்டி, ஜூன் 18: பண்ருட்டி அருகே விழமங்கலம் நகராட்சி துவக்கப் பள்ளி, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக அரசு கணக்கில் ரூ. 1 லட்சத்தை நன்கொடையாளர்கள் சில வாரங்களுக்கு முன் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து பள்ளி துவங்குவதற்கான அனைத்து பணிகளும் நடந்து முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் பண்ருட்டிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், வேல்முருகன் எம்எல்ஏ ஆகியோர் பள்ளி அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் ஆட்சியர் கூறும்போது, அரசு சார்பில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் போதுமான இடம், பாதுகாப்பு வசதிகள் உள்ளது. வேல்முருகன் எம்எல்ஏ உதவியுடன் நடப்பாண்டே இந்த பள்ளி துவங்கப்படுவது உறுதி, என்றார்.

பண்ருட்டி நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, கவுன்சிலர்கள் தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் பன்னீர்செல்வம், சமூக நலத்திட்ட தாசில்தார் மங்களம், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் அம்பிகா உட்பட பலர் உடன் இருந்தனர்

 

ஒசூர் நகரில் உள்ள ஊராட்சிப் பள்ளிகளை நகராட்சிப் பள்ளிகளாக மாற்ற வலியுறுத்தல்

Print PDF

தினமணி 18.06.2010

ஒசூர் நகரில் உள்ள ஊராட்சிப் பள்ளிகளை நகராட்சிப் பள்ளிகளாக மாற்ற வலியுறுத்தல்

ஒசூர், ஜூன் 17: ஒசூர் நகரில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளை நகராட்சிப் பள்ளிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என நகர திமுக செயலர் வீ.விஜயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர் அருண்ராயிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:

ஒசூர் நகரில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளை நகராட்சிப் பள்ளிகளாக மாற்ற மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, இவை நகராட்சியின் கட்டுப்பாட்டில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல, ராம் நகர் உருது நடுநிலைப் பள்ளி, ஜே.ஜே. நகர் தமிழ் துவக்கப் பள்ளி, பாரதிதாசன் தமிழ் துவக்கப் பள்ளி, தின்னூர் தெலுங்கு துவக்கப் பள்ளி ஆகியன வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.

இங்கு போதிய வசதிகள் இல்லாததால், மாணவர்கள் கல்வி பயிலும் சூழ்நிலை இல்லை. மேலும் இந்த 4 பள்ளிகளில் போதிய கழிவறை, குடிநீர் வசதிகள் இன்றி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே இந்த 4 ஒசூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளை நகராட்சிப் பள்ளிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிக்கு மேஜைகள் வழங்கி உதவி

Print PDF

தினமணி 17.06.2010

நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிக்கு மேஜைகள் வழங்கி உதவி

திருப்பூர், ஜூன் 16: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலிகள் நடைபயிற்சியாளர் நலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளிக்கு நிலம் வழங்கிய நஞ்சப்ப செட்டியாரின் 75-வது ஆண்டு விழா, அவரது குடும்பத்தினரை கௌரவித்தல், அப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட விழாக்கள் புதன்கிழமை நடைபெற்றது.

நடைபயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வளம் அமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி, கபடி மற்றும் கல்வி அறக் கட்டளை தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சங்க உறுப்பினர்கள் சௌந்தரராஜன், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் துரைச்சாமி வரவேற்றார். மேயர் க.செல்வராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

விழாவில், நஞ்சப்ப செட்டியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. அவரது குடும்பத்தினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, அப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட து. மேலும், ரூ. ஒரு லட்சம் மதிப்பில் பள்ளிக்கு மேஜை, நாற்காலிகளும் தானமாக வழங்கப்பட்டன. சங்க நிர்வாகி லீலா நன்றி கூறினார்.

 

 


Page 53 of 111