Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பண்ருட்டி நகராட்சி துவக்கப்பள்ளியை தரம் உயர்த்த கல்வி அதிகாரி ஆய்வு

Print PDF

தினமலர் 14.06.2010

பண்ருட்டி நகராட்சி துவக்கப்பள்ளியை தரம் உயர்த்த கல்வி அதிகாரி ஆய்வு

பண்ருட்டி; பண்ருட்டி நகராட்சி துவக்கப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான ஆய் வுப் பணி நடந்தது.பண்ருட்டியில் பெண் கள் உயர்நிலைப் பள்ளிக்கு தேர்வு செய்யப் பட்ட இடத்தை சி..., அமுதவல்லி, தாசில்தார் ஆகியோர் பார்வையிட்டு தேர்வு செய்தனர். முதல் கட்டமாக விழமங்கலம் நகராட்சி துவக் கப் பள்ளியை பெண்கள் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஒரு லட்சம் ரூபாய் பொதுமக்கள் பங்களிப்பாக வழங்க கேட்டுக் கொண்டனர்.மேலும் உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான இடத்தை பக்கத்தில் உள்ள கோவில் டிரஸ்டுக்கு சொந் தமான இடத்தை வாங்கவும் முடிவு செய்யப் பட்டது.அதனைத் தொடர்ந்து டி..., கணேசமூர்த்தி (பொறுப்பு) பள்ளிக்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், தொழிலதிபர் வைரக்கண்ணு, அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன், தி.மு.., கவுன்சிலர் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி: துணை வட்டாட்சியருக்குப் பாராட்டு

Print PDF

தினமணி 11.06.2010

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி: துணை வட்டாட்சியருக்குப் பாராட்டு

மதுரை, ஜூன் 10: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் மற்றும் மாநில அளவில் முதலிடம் பெறுவதற்காகவும் சிறப்பு வகுப்புகள் நடத்தி பயிற்சி அளித்த துணை வட்டாட்சியரை மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் பாராட்டினார்.

தமிழக அளவில் முதன் முறையாக மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தேர்ச்சி பெற இயலாத குறைந்த மதிப்பெண் பெற்ற ஏழை, எளிய மாணவ, மாணவியர் 82 பேரைத் தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு மாநகராட்சி திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் தங்கும் இடம், உணவுஉள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை அளித்தனர்.

இப்பயிற்சி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரையில் நடைபெற்றது. மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக எளிய முறையில் ஆசிரியரால் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இதனால் தேர்ச்சி பெற இயலாத நிலையில் இருந்த 46 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இச்சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த துணை வட்டாட்சியர் பாலாஜி, மாநகராட்சி தமிழ் ஆசிரியர் ஜஸ்டின் ஆகியோரை ஆணையர் பாராட்டினார்.

இதே போல் தொடர்ந்து இந்த கல்வி ஆண்டிலேயே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெறக்கூடிய மாணவ, மாணவியரைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாநில அளவில் சிறப்பிடம் பெற வைக்க தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ஆணையர் தெரிவித்தார்.

 

நகராட்சி பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர் 11.06.2010

நகராட்சி பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி

ஓசூர்: ஓசூர் நகராட்சி உருது, கன்னடம், தமிழ், தெலுங்கு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சார்பில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி தலைவர் சத்யா பேரணியை துவக்கி வைத்தார். துணை தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் அக்ரோ நாகராஜ், எல்லோராமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உருது பள்ளி தலைமை ஆசிரியர் ரவி அப்துல்லா வரவேற்றார். பேரணி பள்ளி முன் இருந்து துவக்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு கல்வி விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். பேரணியில் 1, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலர்கள் சுகுமார், ஆர்.எஸ்.மணி, சுந்தர்ராஜன், தொடக்க கல்வி அலுவலர் பாரதி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் லோகேஷ், ஒன்றிய அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*வேப்பனப்பள்ளி ஒன்றியம் வேப்பனப்பள்ளி தமிழ் மற்றும் தெலுங்கு தொடக்கப்பள்ளி, குறுவள மையம் ஆகியவை சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை யூனியன் சேர்மேன் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணி, கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள் அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கி, ரகு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் குணசேகரன் ஆகியயோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர

 


Page 54 of 111