Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பள்ளி மாணவர்களைப் பாதித்த புதர்ச்செடிகள் அகற்றம்

Print PDF

தினமணி 10.06.2010

பள்ளி மாணவர்களைப் பாதித்த புதர்ச்செடிகள் அகற்றம்

போடி, ஜூன் 9: போடியில் பள்ளி மாணவர்களை பாதிக்கும் வகையில் இருந்த புதர்ச் செடிகளை நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

போடி நகராட்சிக்கு பாத்தியப்பட்ட அண்ணா நினைவு நகராட்சி நடுநிலைப் பள்ளி பழைய பஸ் நிலையத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளிக் கட்டடத்தின் வடக்குப் பகுதியில் கழிவு நீரோடை செல்கிறது.

இந்நிலையில், கழிவுநீரோடையில் புதர்ச் செடிகள் வளர்ந்து பள்ளிக் கட்டடத்தை மறைத்தும், விஷ ஜந்துக்களாலும், கொசுக்களாலும் சுகாதாரக் கேடான நிலை நிலவிவந்தது. இதனால், கழிவு நீரோடை குறுகி கழிவுநீர் செல்ல முடியாத அளவுக்கு புதர்ச் செடிகள் மண்டிக் கிடந்தன.

இதுகுறித்து புதன்கிழமை தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் க. சரவணக்குமார், புதர்ச் செடிகளை அகற்றி கழிவுநீரோடையைத் தூர்வார உத்தரவிட்டார்.

அதன்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, மெர்லி வர்கீஸ், சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பள்ளிகட்டடத்தின் வடக்குப் பகுதியில் உள்ள புதர்ச் செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் கழிவுநீரோடையைத் தூர்வாரும் பணியும் நடைபெற்றது.

சுகாதாரச் சீர்கேட்டைக் களைய உடனடி நடவடிக்கை எடுத்த போடி நகராட்சி ஆணையாளர் மற்றும் நிர்வாகத்துக்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 

நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

Print PDF

தினகரன் 09.06.2010

நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

திருவள்ளூர், ஜூன் 9: திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஸ்டீபன் சற்குணர் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ரகுபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கிய இந்த ஆண்டு 6ம் வகுப்பு கணித புத்தகத்தை எழுதிய இப்பள்ளியின் ஆசிரியர் திருலோகசந்திரனை பாராட்டி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பாஸ்கரன் நினைவு பரிசு வழங்கினார்.

204 நாட்களில் 203 நாட்கள் பள்ளிக்கு வருகை தந்த மாணவி சம்சத் பானுவை பாராட்டி, கவுன்சிலர் தீபா பாஸ்கரன் பரிசு வழங்கினார். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

 

அரசு, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது

Print PDF

தினகரன் 08.06.2010

அரசு, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது

திருப்பூர், ஜூன் 8:தமிழகத்தில் 4 வகை களாக நிலவி வந்த கல்வி முறையை மாற்றி ஒரே கல்வி முறையை அமல்படுத்தியுள் ளது தமிழக அரசு. முதல்கட்டமாக இந்த சமச்சீர் கல்வி முறை 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி அரசு பள்ளிகளில் படித்தாலும், மெட் ரிக் பள்ளிகளில் படித்தாலும் ஒரே மாதிரியான கல்விமுறையே பின்பற்றப்படும். இந்த கல்வி முறை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்தாண்டை விட கூடுதலான அளவு மாணவர்கள் சேர்க்கைக்காக கூடியுள்ளனர். நேற்று மட்டும் 6ம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்க 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கூடியது குறிப்பிடத்தக்கது.

அதே கல்வி, அதிக கட்டணம் தேவையில்லை, சீருடை, புத்தகம் என பலவற்றுக்கு தனித்தனி கட்டணம் தேவையில்லை என்பதால் நடுத்தர வர்க்கத்தினரின் பார்வை தற்போது அரசு பள்ளிகளின் மீது குவிந்துள்ளது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"தனியார் பள்ளிகளில் கல்வி முறை சிறப்பாக உள்ளது என்பதால் எங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தோம். தற்போது அரசு பள்ளி, தனியார் பள்ளிகளில் ஒரே கல்விமுறை என்பதால் எங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக் கிறோம்.

அண்மையில் நடந்த தேர்வுகளில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது," என்கின்றனர் பெற்றோர்கள்.

 


Page 55 of 111