Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது நகராட்சி பள்ளிகளை சீரமைக்க வேண்டும்

Print PDF

தினகரன் 01.06.2010

மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது நகராட்சி பள்ளிகளை சீரமைக்க வேண்டும்

பொள்ளாச்சி, ஜூன் 1: பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது.

நகரமைப்பு அலுவலர் வரதராஜன் முன்னிலை வகித்தார். இதில் நடைபெற்ற கவுன்சிலர்களின் விவாதம்:

கவுன்சிலர் மெக்சன் மணி (காங்.,): நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதே சமயம் நகரில் அவல நிலையில் உள்ள பிற நகராட்சி பள்ளிகளையும் சீரமைக்க முன்வர வேண்டும். பல மாதங்களாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக நகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணி க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

பொதுமக்கள் நலன் கருதி தவறு செய்த அனைவர் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சியின் சுகாதார பிரிவினர் வியாபாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு கண்துடைப்புக்காக ரெய்டு நடத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியதும் பல்வேறு கட்சி கவுன்சிலர்களும் எழுந்து நகராட்சியின் எந்த பிரிவாக இருந்தாலும் சிறிய பணிக்கு கூட லஞ்சம் கொடுத்தாக வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்று ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டினர்.

கடந்த 20 நாட்களுக்கு பிறகு கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கிறது என்பதற்காக இன்று (நேற்று) காலைதான் சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட்டன. சுகாதார பிரிவினர் எந்த பணிகளையும் முழுமையாக செய்வதில்லை.

இவ்வாறு பல்வேறு விவாதங்களுக்கு பிறகு சாதாரண கூட்டத்தில் பல்வேறு பணிகள் தொடர்பாக 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

 

மாநகராட்சி பள்ளி 78.34 சதவீதம் தேர்ச்சி

Print PDF

தினமலர்      28.05.2010

மாநகராட்சி பள்ளி 78.34 சதவீதம் தேர்ச்சி

சேலம்: சேலம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 78.34 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அம்மாப்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 92 சதவீதமும், பாவடி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி 82.4 சதவீதமும், மணக்காடு காமராஜர் மேல்நிலைப்பள்ளி 82 சதவீதமும், குகை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி 81 சதவீதமும், சகாதேவபுரம் மாநகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி 79.6 சதவீதமும், செவ்வாய்ப்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 73.3 சதவீதமும், அம்மாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 73 சதவீதமும், புதுத்தெரு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 67 சதவீதமும், பாவடி மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 64.2 சதவீதமும், கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 61 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.சேலம் மாநகராட்சி பள்ளிகளில் 1,916 பேர் தேர்வு எழுதினர். இதில், 1,501 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 78.34 சதவீதம்.

 

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் மாநகராட்சி பள்ளி முதலிடம்: மாணவிக்கு மேயர் பாராட்டு

Print PDF

தினகரன்         27.05.2010

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் மாநகராட்சி பள்ளி முதலிடம்: மாணவிக்கு மேயர் பாராட்டு

திருநெல்வேலி: எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவியை மேயர் பாராட்டினார்.

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மார்க் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்தார். தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதமாக மாநகராட்சி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்தது மாநகராட்சி வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சாதனை படைத்த மாணவி ஜாஸ்மினை பாராட்டி மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கேடயம் வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். கமிஷனர் சுப்பையனும் மாணவியை கவுரவித்தார். துணைமேயர் முத்துராமலிங்கம் மாணவிக்கு கேடயம் வழங்கினார்.

மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த பாளை., சாராள்தக்கர் பள்ளி மாணவி ஜெயலினையும், மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளி மாணவி ஸ்ரீதேவி லெட்சுமியையும் மேயர் பாராட்டினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் ப.ரா.வெங்கடேசன், நமச்சிவாயம் () கோபி ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை பாராட்டி பரிசு வழங்கினர். இதில் முதன்மை கல்வி அதிகாரி மேரிஜெசிரோச், மாவட்ட கல்வி அதிகாரிகள் கோலப்பபிள்ளை, பரிமளம், மாநகராட்சி உதவிக்கமிஷனர் பாஸ்கர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரோலக்ஸ் பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர

 


Page 57 of 111