Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி பள்ளிகளை மூடுகிறது மாநகராட்சி

Print PDF

தினகரன்            25.05.2010

மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி பள்ளிகளை மூடுகிறது மாநகராட்சி

மும்பை, மே 25: மாணவர் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரு வதால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி பள்ளிக் கூடங்களை மும்பை மாநக ராட்சி இழுத்து மூடி வரு கிறது.

மும்பையில் மராத்தி, இந்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய பிராந்திய மொழி பள்ளிகளையும், ஆங்கில வழி பள்ளிக்கூடங் களையும் மாநகராட்சி நடத்தி வருகிறது.

ஆனால் ஆண்டுக்கு ஆண்டுக்கு மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் பயி லும் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருவ தால் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மாநகராட்சி 64 பள்ளி களை மூடியுள்ளது.

இது தொடர்பாக அனில் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 6 ஆண்டுகளில் மாநகராட்சி 1,08,311 மாணவர்களை இழந்துள் ளது. 2004&05 ஆண்டில் 450 மராத்தி பள்ளிக்கூடங் கள் இருந்தன. இவற்றில் 1,77,538 மாணவர்கள் பயின்று வந்தனர். ஆனால் 2009&01ம் ஆன்டு இந்த பள்ளிகளின் எண்ணிக்கை 413 ஆக குறைந்தது.

இவற்றில் தற்போது 1,07,413 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இதே போல் இந்தி மீடியம் பள்ளிகளில் கடந்த 2004&05ல் 1,35,797 மாண வர்கள் படித்தனர். இது 2009&10ல் 1,13,726 ஆக குறைந்தது. இந்தி மீடியம் பள்ளிகள் 2 மூடப்பட்டுள் ளன. குஜராத்தி மீடியம் பள்ளிகள் 6,967 மாணவர் களை இழந்துள்ளன.

உருது பள்ளிகளின் எண்ணிக்கை 208ல் இருந்து 203 ஆக குறைந் துள்ளது. கடந்த 2004&05ல் மாநகராட்சி 50 தமிழ் மீடி யம் பள்ளிகளை நடத்தி வந்தது. இவற்றில் மொத் தம் 15,813 மாணவர்கள் படித்து வந்தனர்.

ஆனால் தற்போது தமிழ் பள்ளிகள் 45 மட்டு மே உள்ளன. இதில் 10,032 மாணவர்கள் படிக்கின்ற னர். இதே கால கட்டத்தில் 5 தெலுங்கு பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பிராந் திய மொழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் அதே நேரத்தில் ஆங்கில வழிக்கல்வியை தேர்ந்து எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2004&05ல் மும்பை மாநகராட்சி 46 ஆங்கில வழி பள்ளிக்கூடங் களை நடத்தியது. இதில் மொத்தம் 18,418 மாணவர் கள் பயின்றனர். ஆனால் தற்போது பள்ளிகளின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. படிக்கும் மாணவர்களோ 26,637 பேர். இவ்வாறு அந்த தக வலில் கூறப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் கல்வி கமிட்டி தலைவர் ருக்மிணி கார்தமால் இது பற்றி கூறுகையில்,"ஆங்கில வழிக் கல்வியில் படித்தால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் வளமாக இருக் கும் என்று பெற்றோர் நம்புகின்றனர். இதனால் ஆங்கில மீடியம் பள்ளி களில் சேரும் மாணவர் களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது" என் றார்.

 

மராத்தியில் முதுகலை பட்டம் பெற்றால் ஊழியர்களுக்கு இரண்டு இன்கிரிமெண்ட்

Print PDF

தினகரன்   25.05.2010

மராத்தியில் முதுகலை பட்டம் பெற்றால் ஊழியர்களுக்கு இரண்டு இன்கிரிமெண்ட்

மும்பை, மே 25: மராத்தி மொழியில் முதுகலை பட்டம் பெறும் ஊழியர்களுக்கு இரண்டு இன்கிரிமெண்ட் வழங்கப்படும் என மும்பை மாநகராட்சி தெரி வித்துள்ளது.

தெரு சண்டை அரசியல் கொள்கையை மாற்றியுள்ள ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி, கடந்த மாதம் மாநகராட்சியிடம் ஒரு புதுமையான திட்டத்தை முன்வைத்தது. மராத்தி மொழியில் முதுகலை பட்டம் பெறும் மாநகராட்சி ஊழியர்களுக்கு இரண்டு இன்கிரிமெண்ட் வழங்கப் பட வேண்டும் என்பதே அந்த திட்டம்.

இந்த திட்டத்தை மாநகராட்சி கூட்டத்தின் போது நவநிர்மாண் சேனா கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏவான மங்கேஷ் சாங்கலே முன்வைத்தார். இதற்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவிக்க, காங் கிரஸ் மட்டும் எதிர்த் தது. எதிர்த்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் நவநிர்மாண் சேனா திட்டம், மாநக ராட்சி அவையில் வெற்றி பெற்றது.

இது குறித்து சாங் கலே கூறுகையில், "இரண்டு இன்கிரிமெண்ட் கொடுக்கும் போது ஊழி யர்கள் பலர் மராத்தி மொழியில் முதுகலை பட்டம் பெற முயற்சி எடுப்பார்கள். மாணவர்கள் இல் லாததால் பல மராத்தி பள்ளிக்கூடங்கள் மூடப் படும் சூழ்நிலையில், மாநகராட்சியின் இந்த புதிய திட்டத்தால் குறைந் தது பல்கலை கழக மட்டத்திலாவது மராத்தி மொழி காப்பாற்றப்படும்" என்றார்.

மும்பை மாநகராட்சி யின் ஆட்சி மொழியாக மராத்தி மொழி கடந்த 2008, ஜூன் மாதம் அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின் மாநகராட்சி ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்துமே மராத்தி மொழிக்கு மாற்றப் பட்டது.

நவநிர்மாண் சேனா வின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏ ராஜ்ஹன்ஸ் சிங் கூறுகையில், "மாநக ராட்சியின் ஆட்சி மொழியாக மராத்தி இருக்கும் போது அந்த மொழியில் முதுகலை பட்டம் பெறும் ஊழியர் களுக்கு தனி சலுக்கை அளிக்க வேண்டிய அவ சியம் என்ன இருக்கிறது" என்றார்.

 

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு சலுகைகள் கல்வித்துறை ஆசிரியர்களைப் போல கிடைக்கும்

Print PDF

தினமலர்       25.05.2010

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு சலுகைகள் கல்வித்துறை ஆசிரியர்களைப் போல கிடைக்கும்

மதுரை:மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை ஆசிரியர்களைப் போல சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி ஆசிரியர்கள், அரசால் நியமிக்கப்பட்டிருந்தாலும் இவர்களுக்கு உரிய சம்பளத்தை, உள்ளாட்சி நிர்வாகம் தருகிறது. மாநகராட்சியின் நிதி பாதிக்கப் பட்டால், இவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் பாதிக்கப்படுவது வழக்கம். இந்த முரண்பாடு இல்லாமல், மாநகராட்சி ஆசிரியர்களுக்கும் கல்வித் துறையைப் போல சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது.இது குறித்து மாநகராட்சி அனைத்து ஆசிரியர் மன்ற நிர்வாகிகளுடன் மாநகராட்சி தரப்பில் கமிஷனர் செபாஸ்டின் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில், மாநகராட்சி எடுக்க இருக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு, ஆசிரியர் மன்ற நிர்வாகிகளுக்கு மாநகராட்சி கடிதம் அனுப்பி உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

1.மாநகராட்சி பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்கள், கல்வி ஆண்டு துவக்கத்தில் ஜூன் 1ம் தேதி நிரப்பப்படும்

2.உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக முறையான தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுவர்.

3.ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாள் அன்று ஊதியம் வழங்கப்படும். இவர்களுக்கு ஈட்டிய விடுப்பு மற்றும் பணப்பலன்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும்.

4.பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி இடங்களை நிரப்ப, ஏற்கனவே பள்ளி கல்வி இயக்குனரிடம் கோரப் பட்டுள்ளது.

5.ஜெய்ஹிந்த்புரம் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

6.மாநகராட்சி பாரதிதாசன் மேனிலைப்பள்ளிக்கு எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., நிதியில் ஆய்வகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

7.ஏப்.2003க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு "கான்ட்ரிபியூட்டரி பென்ஷன்" திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

8.மாநகராட்சி கல்வி பிரிவில், தொடக்க கல்விக்கும் மேனிலை கல்விக்கும் தனித்தனி கண்காணிப்பாளர் பணியிடம் ஏற்படுத்த, கல்வித் துறை இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும்.

9.மாநகராட்சி கல்வி பிரிவில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்.

10.மேனிலைப் பள்ளிகளில் அரசால் அனுமதி அளிக்கப்பட்டு, நிதி வழங்கப்படும் பாடப்பிரிவுகளை மட்டுமே நடத்த வேண்டும் என்பது சம்பந்தமான உத்தரவு, மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

11.ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 2000ம் ஆண்டு முதல் சிறப்பு சேம நல நிதியில் ஈவுத் தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 59 of 111