Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிகளுக்கு மேயர் பாராட்டு

Print PDF

தினமணி    20.05.2010

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிகளுக்கு மேயர் பாராட்டு

மதுரை, மே 19: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மாணவிகளை மேயர் ஜி.தேன்மொழி ஊக்கத் தொகை வழங்கிப் பாராட்டினார்.

பிளஸ் 2 தேர்வில் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.பரமேஸ்வரி, புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மாநகராட்சிப் பள்ளிகள் அளவில் ஈ.வெ.ரா. பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். எஸ்.ஜஸ்மீதா பானு 1133 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், எம்.நபீலா பானு 1110 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

மாநில அளவில் புவியியல் பாடத்தில் முதலிடம் மற்றும் மாநகராட்சி அளவில் முதல் இடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டி தலா ரூ.3000, இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ.2000-ஐ மேயர் வழங்கினார்.

ஆணையாளர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் பி.எம்.மன்னன், தலைமைப் பொறியாளர் சக்திவேல், மாநகராட்சி கல்வி அலுவலர் அம்மையப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 'ஒரு ஜோடி ஷூ ; 2 ஜோடி சாக்ஸ்'

Print PDF

தினமலர்       20.05.2010

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 'ஒரு ஜோடி ஷூ ; 2 ஜோடி சாக்ஸ்'

கோவை : கோவை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 9,628 மாணவர்களுக்கு, 'ஒரு ஜோடி ஷூ; இரண்டு ஜோடி சாக்ஸ்' வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கோவை மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், மாநகராட்சி நிர்வாகம் முயன்று வருகின்றன. தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கு இணையாக செயல்வழி கற்றல், ஆங்கில பேச்சு பயிற்சி வழங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. தனியார் பள்ளிகளை போலவே, மாநகராட்சி பள்ளி குழந்தைகளும் தரமான சீருடைகளையும், காலணிகளை அணிந்து வர மாநகராட்சி கல்விக்குழு முடிவு செய்தது. குழந்தைகளுக்கு இவற்றை மாநகராட்சி செலவில் வழங்க அனுமதி கோரியிருந்தது.

இது தொடர்பான மாநகராட்சி தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு,நிதியை மாநகராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்திக்கொள்ளவும் ஒப்புதல் ளித்துள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கு துறை முதன்மை செயலர் நிரஞ்சன்மார்டி இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 45 ஆரம்ப பள்ளிகள், 12 நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 9,628 குழந்தைகளுக்கு, 'ஒரு ஜோடி ஷூ; இரண்டு ஜோடி சாக்ஸ்' வழங்க 19.25 லட்ச ரூபாய் செலவாகும். மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் இவை கிடைக்கும்.

 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கேன்வாஷ் ஷூ, சாக்ஸ்

Print PDF

தினகரன்    18.05.2010

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கேன்வாஷ் ஷூ, சாக்ஸ்

கோவை, மே 19: கோவை மாநகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஆர ம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 9ஆயிரத்து 628 மாணவர்களுக்கு ஒரு ஜோடி கேன்வாஷ் ஷூ, மற்றும் 2 ஜோடி சாக்ஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள் ளது.கோவை மாநகராட்சி பள்ளிகள் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதை ஊக்குவிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கு இணையாக செயல்வழி கற்றல், ஆங்கில பேச்சு பயிற்சி வழங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளை போல் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு தரமான சீருடை, காலணிகள் வழங்கவேண்டும் என்று மாநகராட்சி கல்வி குழுவும் பரிந்துரை செய்தது.

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு குழந்தைகளுக்கு தலா ரூ.200 மதிப்புள்ள கேன்வாஷ் ஷூ மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. ஆண்டு தோறும் இதற்கு ஏற்படும் செலவீனத்திற்கு மாநகராட்சி பொது நிதியில் இருந்து பயன்படுத்திக்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றி அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாநகராட்சி தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தும், அதற்குரிய நிதியை மாநகராட்சி பொது நிதியில் இருந்து பயன்படுத்திக்கொள்ளவும் ஒப்புதல் அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி நேற்று உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 45 ஆரம்ப பள்ளி மற்றும் 12 நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை பயிலும் 9,628 குழந்தைகளுக்கு ஒரு ஜோடி கால ணி(கேன்வாஷ் ஷூ) மற்றும் 2 ஜோடி காலுறை கள்(சாக்ஸ்) வழங்க உத்தேச செலவீனம் ரூ.19.25 லட்சம் ஏற்படும். இந்த நிதியை மாநகராட்சி பொது நிதியில் இருந்து பயன்படுத்திக்கொள்ள கோவை மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை தொடர்ந்து அடுத்த மாதம் பள்ளி திறக்கும் போதே மாநகராட்சி பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு ஒரு ஜோடி கேன்வாஸ் ஷூ, மற்றும் சாக்ஸ் வழங்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு கேன்வாஷ் ஷூ, சாக்ஸ் வழங்கும் திட்டம் சென்னையில் மட்டும் சில பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. அதன் பின் கோவை மாநகராட்சியில் அனைத்து ஆரம்பம் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Page 61 of 111