Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி மாணவர்களுக்கு கேன்வாஸ் ஷூ வழங்க ஒப்புதல்

Print PDF

தினமலர்    15.05.2010

மாநகராட்சி மாணவர்களுக்கு கேன்வாஸ் ஷூ வழங்க ஒப்புதல்

கோவை மாநகராட்சி பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கேன்வாஸ் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.கோவை மாநகராட்சியில் நடுநிலை மற்றும் ஆரம்ப பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 9,628 பேர் படிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு ஜோடி கேன்வாஸ் ஷூ மற்றும் இரண்டு ஜோடி காலுறைகள் (சாக்ஸ்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 19 லட்சத்து 25 ஆயிரத்து 608 ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த தொகையை, கோவை மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து செலவழித்துக் கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி அளித்து, நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது.

 

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி சாதனை

Print PDF

தினமணி      18.05.2010

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி சாதனை

மதுரை, மே 17: தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

ஈரோட்டில் தேசிய குத்துச் சண்டைப் போட்டி நடைபெற்றது. அகில இந்திய அளவில் 27 மாநில அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் தமிழக அணி சார்பில் சோல்ஜர்ஸ் பாக்ஸிங் அகாதெமி வீராங்கனை டி.சிவதமிழ்ச்செல்வி கலந்து கொண்டார்.

இவர் மதுரை மாநகராட்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆவார்.

61-63 கிலோ எடை பிரிவினருக்கான போட்டியில் இவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஏற்கெனவே பாட்னாவில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

சிவதமிழ்ச்செல்வியை சோல்ஜர்ஸ் பாக்ஸிங் அகாதெமி நிறுவனரும் மதுரை மாவட்ட குத்துச் சண்டைக் கழகச் செயலருமான பாஸ்கரசெழியன் பாராட்டினார்.

சப்-ஜூனியர் குத்துச் சண்டைப் போட்டி: மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி சென்னை ஜே.என்.ஸ்டேடியத்தில் மே 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏ.கே.கருணாகரன், செல் எண் 94443 86090, என்.பி.விஸ்வநாதன் 91760 66225 மற்றும் பாஸ்கரசெழியன் 98654 71144 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு

Print PDF

தினமணி     18.05.2010

ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு

ராமநாதபுரம்,மே 17: தொடக்கக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2010 ஆம் ஆண்டுக்குரிய பொது மாறுதல் மற்றும் கலந்தாய்வு வரும் மே 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பெ.பூலோக சுந்தரவிஜயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்த ஆண்டுக்குரிய பொதுமாறுதல் மற்றும் கலந்தாய்வு இணையதளம் மூலமாக ராமநாதபுரம் வட்டார வள மையத்தில் நடைபெறவுள்ளது.

மே 20-ம் தேதி முற்பகலில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல். அன்று பிற்பகல் பட்டதாரி,தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவிஉயர்வு.

மே 21-ம் தேதி முற்பகலில் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவிஉயர்வு.

அன்று பிற்பகல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலைப் பள்ளிகளில் 6,7,8-ம் வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும் நடைபெறும்.

மே 24 ஆம் தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதலும் பிற்பகல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்.

மே 25 ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் அன்று பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் அந்தந்த மாவட்ட கலந்தாய்வு மையங்களில் நடைபெறும்.

இக் கலந்தாய்வு ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள வட்டார வள மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

எனவே மாறுதல் கோருதல் மற்றும் பதவி உயர்வு பெற இருக்கும் ஆசிரியர்கள் உரிய அத் தாட்சியுடன் கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தவறாமல் வருகை தருமாறும் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்தாய்வுக்கு வர இயலாத ஆசிரியர்கள் அவர்கள் சார்பாக உரிய படிவத்தில் அமைந்த கடிதம் அளித்து ஒரு நபரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 62 of 111