Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

கோபி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்

Print PDF

தினமலர்        18.05.2010

கோபி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்

கோபிசெட்டிபாளையம்: கோபி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 40, நகராட்சி பள்ளிகள் 2, அரசு நிதி உதவி பள்ளிகள் 4, சுயநிதி பள்ளிகள் 13, மெட்ரிக் பள்ளிகள் 17 என மொத்தம் 76 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 956 மாணவ மாணவியர் ப்ளஸ் 2 தேர்வு எழுதினர். அரசு பள்ளிகளை சேர்ந்த 5,040 பேரும், நகராட்சி பள்ளிகளை சேர்ந்த 268 பேரும் என மொத்தமாக 5,308 மாணவ மாணவியர் தேர்வெழுதினர். அரசு பள்ளிகளை சேர்ந்த 4,433 பேர், நகராட்சி பள்ளிகளை சேர்ந்த 222 பேர் என மொத்தமாக 4,655 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றனர். கடந்த 2008-09ல் கோபி கல்வி மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.84. 2009-10ல் 87.96 சதவீதம். நகராட்சி பள்ளிகளில் 80.09 லிருந்து 82.84 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 94.64 லிருந்து 94.14 ஆக குறைந்தும், மெட்ரிக் பள்ளிகளில் 98.03 லிருந்து 97.45 ஆக குறைந்தும், சுயநிதி பள்ளிகளில் 97.91 லிருந்து 98.86 ஆக உயர்ந்தும் உள்ளது.

கோபி கல்வி மாவட்டத்தில் கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளாங்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி, பி.மேட்டுபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தி பண்ணாரியம்மன் மெட்ரிக் பள்ளி, கோபி பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பு. புளியம்பட்டி எஸ்.ஆர்.சி., மெட்ரிக் பள்ளி, கோபி ஸ்ரீ வித்யாலாய மெட்ரிக் பள்ளி, சத்தி புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி, பவானி புனித மரியன்னை மெட்ரிக் பள்ளி, கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் காமராஜர் மேல்நிலை பள்ளி, கோபி டி.எஸ். சாரதா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவ மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை

Print PDF

தினமணி 14.05.2010

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை

திருவண்ணாமலை, மே 13: பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2010-11ம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்) கலந்தாய்வு மே 18-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அசோக்நகர் அரசு மகளில் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) கலந்தாய்வு 18-ம் தேதி மதியம் 2 மணிக்கு அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்) கலந்தாய்வு வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) கலந்தாய்வு வரும் 19-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. மேற்கண்ட கலந்தாய்வுகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கலந்தாய்வு அலுவலராக செயல்படுவார்.

முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்) கலந்தாய்வு வரும் 18-ம் தேதி திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

அதேபோல் மேற்கண்ட ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 19-ம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறும். முதன்மைக் கல்வி அலுவலர் கலந்தாய்வை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கோவை மாநகராட்சி பள்ளியில் மாலைநேர கல்வி மையம் திறப்பு

Print PDF

தினமணி    14.05.2010

கோவை மாநகராட்சி பள்ளியில் மாலைநேர கல்வி மையம் திறப்பு

கோவை, மே 13: கோவை} மேட்டுப்பாளையம் சாலை, மாநகராட்சி கென்வின் நடுநிலைப் பள்ளியில் மாலைநேர கல்வி மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இம்மையத்தை மேயர் ஆர்.வெங்கடாசலம் திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

49}வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் உள்ள இப்பள்ளியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாலை நேர கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் இரவு நேரங்களில் படிக்க முடியாத ஏழை மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளி முடிந்ததும் இம் மையங்களில் படிக்கலாம்.

இம்மையங்கள் மாலை 6 முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும். இம்மையத்தில் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக அமர்ந்து படிக்கும் வகையில் வட்ட மேசையுடன் கூடிய நாற்காலிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்விசிறி, மின்சிக்கன விளக்குகள், கழிப்பிட வசதி மற்றும் இதர வசதிகளுடன் ரூ. 3.60 லட்சம் செலவில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிற மண்டலங்களில் உள்ள பள்ளிகளிலும் இதுபோன்ற மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இம்மையங்களை கண்காணிக்க தனிநபர்கள் மாநகராட்சி மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியில் கல்விக்குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம், 35}வது வார்டு கவுன்சிலர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

 


Page 63 of 111