Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

17 பள்ளிகள் தரம் உயர்வு

Print PDF

தினமலர் 05.05.2010

17 பள்ளிகள் தரம் உயர்வு

விருதுநகர்: மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம் குலசேகரநல்லூர், கீழக்குடி, உடையனாம்பட்டி, நாரணபுரம், விஸ்வநத்தம், பள்ளபட்டி, சிவகாசி ஏ.வி.டி. நகராட்சி பள்ளி, சுப்பிரமணியபுரம், போத்திரெட்டிபட்டி, ஓ.மேட்டுப்பட்டி, முத்தார்பட்டி, பாம்பாட்டி, வல்லப்பன்பட்டி, அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி, அயன்கரிசல்குளம், சீல்நாயக்கன்பட்டி, அயன் கொல்லங்கொண்டான் ஆகிய 17 பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள் ளன.

Last Updated on Wednesday, 05 May 2010 06:09
 

பள்ளி கட்டட திறப்பு விழா

Print PDF

தினமலர் 04.05.2010

பள்ளி கட்டட திறப்பு விழா

செய்யாறு: செய்யாறு நகராட்சி முஸ்லிம் பள்ளி கட்டட திறப்பு விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் அசோகன் பங்கேற்றார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் மதியழகன் மற்றும் பள்ளி கல்விக்குழு ஆலோசகர் ஆரிப்பாஷா முன்னிலை வகித்தனர்.3 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை முதன்மை கல்வி அலுவலர் அசோகன் திறந்து வைத்தார். நகராட்சி தலைவர் சம்பத், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மணி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சரளா அறிவழகி ஜெயராமன், நகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.முன்னதாக, தலைமை ஆசிரியர் குமார் வரவேற்றார், ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

 

நகராட்சிப் பள்ளி தத்தெடுப்பு விழா

Print PDF

தினமணி 03.05.2010

நகராட்சிப் பள்ளி தத்தெடுப்பு விழா

திருவாரூர், மே 2: திருவாரூர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் திருவாரூர் - விஜயபுரத்தில் அலிவலம் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியைத் தத்தெடுக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சங்கத் தலைவர் கே. கலையரசன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் கே. ரத்தினவேலு முன்னிலை வகித்தார். திருவாரூர் நகர்மன்றத் தலைவர் கு. தென்னன், துணைத் தலைவர் ஆர். சங்கர், ரோட்டரி சங்க உதவி ஆளுநர் வி. பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

விழாவில் இப்பள்ளியை கிங்ஸ் ரோட்டரி சங்கம் தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்குச் சீருடைகள் வழங்கப்பட்டன. மேலும், இப்பள்ளிக்குத் தேவையான வசதிகள் சங்கம் சார்பில் செய்து தரப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

விழாவில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ச. சவுந்தரராஜன், டேங்க் சிட்டி ரோட்டரி தலைவர் புலவர் மு. சந்திரசேகரன், சோழா ரோட்டரி தலைவர் பிறை. அறிவழகன், வர்த்தகர் சங்க முன்னாள் தலைவர் வி.கே.எஸ். அருள், ரோட்டரி சங்கச் செயலர் ஏ.கே. குழந்தைவேலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 


Page 65 of 111