Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

வாங்க... வாங்க! படிக்க வாங்க!

Print PDF

தினமலர் 30.04.2010

வாங்க... வாங்க! படிக்க வாங்க!

கோவை: பள்ளி சேர்க்கையை வலியுறுத்தி, சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மேள வாத்தியங்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். 'பள்ளி வயதுள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்' என, மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்டம், இந்தாண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் பள்ளி வயதுள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மேற்பார்வையாளர் ராமதாஸ் பேரணியை துவக்கி வைத்தார்.

மாணவர்களில் சிலர் தொழில் ரீதியிலான வாத்தியக்காரர்களுக்கு இணையாக மேள வாத்தியம் அடித்தபடி முன்னே செல்ல, பள்ளி தலைமை ஆசிரியர் சின்னபொண்ணு தலைமையில் ஆசிரியர்களும், பிற மாணவர்களும் வழி நெடுக மாணவர் சேர்க்கையை வலியுறுத்தும் நோட்டீஸ்களை வினியோகித்தபடி சென்றனர். முன்னதாக அனைத்து மாணவர்களும் பேரணியில் பங்கேற்க உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பி வந்தனர். வெயில் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு கருதி காலில் செருப்பு அணியாத சில மாணவர்களை பேரணியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதனால் அம்மாணவர்கள் ஏக்கத்துடன் பார்த்து நின்றனர். சித்தாபுதூரில் உள்ள பள்ளியில் துவங்கிய பேரணி, முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

Last Updated on Friday, 30 April 2010 05:49
 

புதிய வகுப்பறை திறப்பு விழா

Print PDF

தினமலர் 29.04.2010

புதிய வகுப்பறை திறப்பு விழா

ஆம்பூர்: ஆம்பூர் நகராட்சி பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது. ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.., மூலம் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதற்கான திறப்பு விழா நடந்தது. மாதனூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருப்பதி தலைமை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் கருணாகரன், கல்வி குழு தலைவர் யுவராஜ், கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு, தட்சிணாமூர்த்தி, நூர்ஜகான், ராஜன், சாம் செல்லபாண்டியன், ரபீக்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுப்பிரமணி வரவேற்றார்.நகராட்சி தலைவர் நசீர்அகமது, வகுப்பறைகளை திறந்து வைத்தார். விழாவில் நகராட்சி கமிஷனர் உதயராணி, நகராட்சி பொறியாளர் இளங்குமரன், கல்வி குழு உறுப்பினர்கள் கணேசபாண்டியன், எசுடையான், ஜாகிர்உசேன், சாவித்திரி, தலைமையாசிரியர்கள் ரவிச்சந்திரன், ஜோதியம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 29 April 2010 06:41
 

ரூ.85 கோடி செலவில் 5,500 ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் சீரமைப்பு: சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தகவல்

Print PDF

மாலை மலர் 28.04.2010

ரூ.85 கோடி செலவில் 5,500 ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் சீரமைப்பு: சட்டசபையில் மு..ஸ்டாலின் தகவல்

ரூ.85 கோடி செலவில்      5,500 ஊராட்சி ஒன்றிய       பள்ளிகள் சீரமைப்பு:       சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தகவல்

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து துணை முதல்- அமைச்சர் மு..ஸ்டாலின் கூறியதாவது:-

2010-11ஆம் ஆண்டில் தாரமங்கலம் ஒன்றியம், மானத்தாள் ஊராட்சி, கரட்டூர் பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். கரட்டூர் தொடக்கப்பள்ளியில் தற்போது சிமெண்ட் அட்டைக் கூரை கட்டிடம் மட்டுமே உள்ளது.

இந்த ஊராட்சியில் 2010-2011ஆம் ஆண்டில் அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்த இருக்கின்ற காரணத்தால், அந்த திட்டத்திலே இதுவும் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் பள்ளிகளின் சிமெண்ட் அட்டைக் கூரைக் கட்டிடத்தை, ஓட்டு கட்டிடமாக மாற்றவும், பழுதுகளை நீக்கவும், இந்தப்பணிகள் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, இந்த ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அடங்கியிருக்கின்ற தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள் முடிந்த நிலையில் இருக்கக் கூடிய வகையில் சொல்ல வேண்டுமென்றால், 2007-08லே 328 தொடக்கப்பள்ளிகளும், 92 நடுநிலைப் பள்ளிகளும், 2008-09ஆம் ஆண்டிலே 151 தொடக்கப் பள்ளிகளும், 39 நடுநிலைப் பள்ளிகளும், மற்றும் 2009-2010 ஆம் ஆண்டிலே 121 தொடக்கப் பள்ளிகளும், 32 நடுநிலைப் பள்ளிகளும், ஆக மொத்தம் 13 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,026 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பணிகள் எல்லாம் முழுமை பெற்றிருக்கின்றன.

அதே போல மூன்றாம் நிலை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை பொறுத்த வரை சேலம் மாவட்டத்தில் 13 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 பள்ளிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலத்தில் இருக்கக் கூடிய கிராம ஊரகப்பகுதிகளில் அமைந்திருக்கக் கூடிய 5 ஆயிரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும் மற்றும் 3ஆம் நிலை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அமைந்திருக்கக் கூடிய 500 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளும் ரூ.85 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளன.

என்னனென்ன பணிகள் இதிலே நடைபெறுகிறது என்று கேட்டால் இந்த பள்ளிகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சிமெண்ட் அட்டை கூரை மங்களூர் ஓட்டுக் கூரையாக மாற்றி அமைக்கப்படுகிறது.

மங்களூர் ஓட்டுக்கூரை அமைக்கப்படும் போது, மரச் சட்டங்களுக்கு பதிலாக இரும்பு சட்டங்கள் மற்றும் ரீப்பர்கள் புதிதாக அமைக்கப்படுகிறது. பழுதடைந்த மங்களூர் ஓட்டுக் கூரைகள் பழுது நீக்கம் செய்யப்படுகிறது.

தரை, கூரை, சுற்றுச்சுவர், பழுது நீக்கும் பணிகளும் இந்த திட்டத்திலே மேற்கொள்ளப்படுகிறது. பழுதடைந்த ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மாற்றி அமைக்கப்படுகிறது. அல்லது பழுது நீக்கம் செய்யப்படுகிறது.

சுண்ணாம்பு பூச்சு மற்றும் வண்ணப்பூச்சுகளும் இந்த திட்டத்தின் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Wednesday, 28 April 2010 11:30
 


Page 66 of 111