Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நகராட்சி பள்ளிக் கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி 28.04.2010

நகராட்சி பள்ளிக் கட்டடம் திறப்பு

ஆம்பூர், ஏப்.27:ஆம்பூர் பெத்லகேம் பகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.9.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் திருப்பதி, கருணாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி ஆசிரியர் என். சுப்பிரமணி, நகராட்சி ஆணையர் தா. உதயராணி, கல்விக்குழுத் தலைவர் கே. யுவராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 26.04.2010

பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க மாநகராட்சி முடிவு

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளி களில் உள்ள பழைய கட்டடங்கள், பள்ளிக்கு அருகில் உள்ள பழைய கட்டடங்களை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ஜெய்வாபாய் பள்ளியில், புதிதாக 33 வகுப் பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வரு கிறது. இப்பள்ளி வளாகத்தில் 50 ஆண்டு கட்ட டங்களும் உள்ளன. ஆறு வகுப்பறைகள் கொண்ட ஓட்டுக்கூரை கட்டடம்; மூன்று வகுப்பறைகளும், ஒரு ஆசிரியர் அறையும் கொண்ட ஓட்டுக்கூரை கட்டடம்; ஏழு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் என மூன்று கட்டடங்கள் மிகவும் மோசமான நிலை யில் உள்ளன. இவற்றை இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நஞ்சப்பா பள்ளியில் இரண்டு கைத்தறி அறை கள், ஒரு சத்துணவு மைய கட்டடம்; ஒரு வாகன நிறுத்துமிடம் என நான்கு கட்டடங்கள் பழுத டைந்து, மோசமான நிலையில் உள்ளன. 16வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளிக்கு அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான ஓட்டுக்கூரை கட்டடம் உள்ளது. இக்கட்டடங் களையும் இடித்து அப்புறப் படுத்த மாநகராட்சி நிர் வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த தீர்மானம், வரும் 29ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் மன்ற ஒப்புதலுக்காக வைக்கப்படுகிறது.

Last Updated on Monday, 26 April 2010 06:43
 

ஏழை மாணவ, மாணவியருக்கான கணினி சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்

Print PDF

தினமணி 22.04.2010

ஏழை மாணவ, மாணவியருக்கான கணினி சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்

மதுரை, ஏப். 21: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கான கணினி, ஆங்கிலம் சிறப்பு பயிற்சிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

மகால் திருவள்ளுவர் நகராட்சிப் பள்ளியில் இந்த சிறப்பு வகுப்பை மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தொடங்கிவைத்தார். அவர் பேசியதாவது:

வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் கிரேஸ் பீட்டர் சாரிடபிள் டிரஸ்ட் ஆகிய தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் இச்சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

25 கணிப்பொறிகள், 5 சிறந்த கணிப்பொறி வல்லுநர்கள் மற்றும் 5 சிறந்த ஆங்கில ஆசிரியர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 5 வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

மாணவர்கள் கோடை விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதை மாணவ, மாணவியர் உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதில், .வெ.ரா. பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பசுல் ரகுமான், கிரேஸ் பீட்டர் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் விஜயகுமார், கல்வி அலுவலர் அம்மையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 67 of 111