Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளி மாணவருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

Print PDF

தினமலர் 22.04.2010

மாநகராட்சி பள்ளி மாணவருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

மதுரை : மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கில பேச்சு பயிற்சி நேற்று தொடங்கியது.மகால் திருவள்ளுவர் மாநகராட்சி பள்ளியில் இதை தொடங்கி வைத்து, கமிஷனர் செபாஸ்டின் கூறும் போது, ''தமிழகத்தில் முதன்முறையாக பிளஸ் 1 படிக்கும் 200 ஏழை மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ சாரிடபிள் டிரஸ்ட், கிரேஸ் பீட்டர் சாரிடபிள் டிரஸ்ட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் மூலம் இச்சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. ஐந்து கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், ஐந்து ஆங்கில ஆசிரியர்களைக் கொண்டு, ஒரு நாளைக்கு ஐந்து வகுப்புகள் நடக்கும்'' என்றார்.மாநகராட்சி கல்வி அலுவலர் அம்மையப்பன் வரவேற்றார். தொண்டு நிறுவன நிர்வாகிகள் விஜயகுமார், கனகவேல் மனோர், ஜெகதீசன், நாகம்மை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை பசுல் ரஹ்மான் வாழ்த்தி பேசினர். மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன் நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 22 April 2010 06:57
 

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஏப். 21 முதல் இலவச கணினி, ஆங்கில பேச்சுப் பயிற்சி

Print PDF

தினமணி 20.04.2010

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஏப். 21 முதல் இலவச கணினி, ஆங்கில பேச்சுப் பயிற்சி

மதுரை, ஏப். 19: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாகக் கணினி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் கூறியதாவது:

தற்போது 11}ம் வகுப்புத் தேர்வு எழுதி பிளஸ் 2 செல்லக் கூடிய 200 ஏழை மாணவர்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் 21}ம் தேதி முதல் மகால் அருகில் உள்ள மாநகராட்சி திருவள்ளுவர் பள்ளியில் காலை மற்றும் மாலையில் சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

ஒரு வகுப்புக்கு 50 பேர் தேர்வு செய்து, ஒரு மணி நேரம் கணினிப் பயிற்சியும், அடுத்த ஒரு மணி நேரம் ஆங்கிலப் பயிற்சியும் (ஸ்போக்கன் இங்கிலீஷ்) அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 10}ம் வகுப்பு மற்றும் 12}ம் வகுப்பு ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பாடம் வாரியாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, நடந்து முடிந்த தேர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.

சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதால் கடந்தாண்டைவிட தற்போது தேர்ச்சி விகிதம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்பட்சத்தில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 20 April 2010 10:05
 

மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி

Print PDF
தினமலர் 16.04.2010

மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோவை: மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க, மாநகராட்சி ஆசிரியர்களுக்கு மொழிப்பயிற்சி அளிக்க கல்விக் குழு கூட்டத்தில் முடிவானது.கோவை மாநகராட்சி கல்விக் குழு கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.குழு தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மேட்டுப்பாளையம் ரோடு ஹவுசிங்யூனிட் அருகே 18 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பை கிடங்கு வெள்ளலூருக்கு மாற்றம் செய்யப்பட்டது. வெள்ளலூருக்கு மாற்றம் செய்யப்பட்ட பின் குப்பை கிடங்கிலிருந்த குப்பைகளை மக்கச்செய்து மலைபோல் மாற்றி அந்த இடத்தை குன்று போல் உருவாக்கியிருக்கின்றனர்.

செடி கொடிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியை நவீன வாட்டர் தீம் பார்க்காக மாற்ற கோவை மாநகராட்சி கல்வி மற்றும் பூங்காக்கள் குழு நேற்று முடிவு செய்தது. ஆர்.எஸ்.புரம் ஆண்கள் பள்ளியாக இருந்தது. தற்போது இருபாலர் பள்ளியாக மாற்றம் செய்யப்பட் டுள்ளது. பள்ளியிலுள்ள பிரம்மாண்டமான மைதானம் மாநகராட்சி கால்பந்து மைதானமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. வடகோவை மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு பின்பகுதியிலுள்ள கட்டட கட்டமைப்புகளை பயன்படுத்தி அங்கு நவீன அறிவியல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உக்கடம் ஒக்கிலியர் காலனியிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பிரம்மாண்டமான கலையரங்கம் அமைக்க முடிவானது. மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் ஆங்கில மொழிப்பேச்சுத்திறனை வளர்க்க, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு தனியார் ஆங்கில மொழி பயிற்சி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சி அளி த்து, பின் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை உடனடியாக துவக்க மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில் மாநகராட்சி தலைமை பொறியாளர் கருணாகரன், மாநகராட்சி கல்வி அலுவலர் சோமசுந்தரி, கல்விக்குழு உறுப்பினர்கள் தமிழ்செல்வி, ÷ஷாபனா, செந்தில் குமார், கார்த்திக் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 16 April 2010 06:28
 


Page 68 of 111