Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

1.100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு: மேயர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 09.04.2010

1.100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு: மேயர் அறிவிப்பு

சென்னை:பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' என மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பெயர்கள், 'சென்னை பள்ளிகள்' என பெயர் மாற்றம் செய் யப்படும் என்று மேயர் சுப்ரமணியன், பட்ஜெட்டில் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, நேற்று ரிப்பன் கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'சென்னை பள்ளிகள்' என்ற பெயர் பலகைகளை மேயர் திறந்து வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் மற்ற துறைகளை விட கல்வித் துறையும், சுகாதாரத் துறையும் சிறந்து விளங் குகின்றன. கல்வித் துறை சிறந்து விளங்க முக்கிய காரணம் ஆசிரியர்கள் தான்.மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை முன்கூட்டியே துவங்கப்படும் என அறிவித்து, ஏப்ரல் 1ம் தேதி முதல் சேர்க்கை துவங்கியது.

ஒரு வார காலத்தில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1,500 மாணவ, மாணவியர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.காலம், காலமாக இருந்து வரும் சூழ்நிலைகளால், 'கார்ப்பரேஷன் ஸ்கூலில் படிக்கிறான்' என சொல் வதற்கு பெற்றோர் அச்சப்படும் நிலை உள்ளது. அதை தவிர்க்கவும், கல்வித் தரத்தை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தவும், மாநகராட்சி பள்ளிகளின் பெயர்கள், சென்னை பள்ளிகள்' என மாற்றப்படும்.

மாநகராட்சியின் மழலையர் பள்ளி முதல், மேல்நிலைப்பள்ளி வரை உள்ள 312 பள்ளிகளும், 'சென்னை பள்ளிகள்' என்றே இனி அழைக் கப்படும். பத்து நாட்களில், படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் ஒரே அளவிலான பெயர் பலகைகள் மாட்டப் படும். கடந்த ஆண்டில், 800 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களில் 528 சிறுவர், சிறுமியர், மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

மாநகராட்சி இரவு காப்பகத்தில் தங்கியிருக்கும் நான்கு சிறுவர்கள், மாநகராட்சி பள்ளி யில் சேர்க்கப்பட உள்ளனர்.சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் வளர்ச்சியை விவரிக்கும் வகையில், சின்னமலை பள்ளியில் இரண்டு நாள் கண்காட்சி நடத்தப்பட் டது. இதை 5,237 பொதுமக்கள் பார்வையிட்டனர். அதுபோல், வடசென்னை சர்மாநகர் பள்ளியில் வரும் 26ம் தேதி, கல்விக் கண்காட்சி துவங்கப் படும்.கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி களில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 83 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 81 சதவீதமும் தேர்ச்சி விகிதம் இருந்தது.

இதை மேலும் அதிகப்படுத்த ஊக்குவிக்கும் வகையில், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான அன்றே, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து இந்த ரொக்கப் பரிசு வழங்கப்படும். அதை, பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு மேயர் பேசினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர.

Last Updated on Friday, 09 April 2010 07:33
 

பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி 08.04.2010

பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

அரவக்குறிச்சி
, ஏப். 7: பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள் பற்றிய கணக்கெடுக்கும் பணி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள் பற்றிய கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவஞானம், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பரமானந்தம் ஆகியோரின் உத்தரவுப்படி இப்பணி நடைபெற்று வருகிறது.

பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் அரவக்குறிச்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மேற்பார்வையில் பள்ளி செல்லாத குழந்கைகள் மற்றும் படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி ஏப். 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற்றது.

கணக்கெடுக்கும் பணியை பள்ளபட்டி பேரூராட்சித் தலைவர் தோட்டம் டி.எம். பசீர்அகமது தலைமை ஏற்று தொடக்கிவைத்தார்.

கரூர், அரவக்குறிச்சி, பரமத்தி மற்றும் தாந்தோணி வட்டார வள மையத்திற்கு உள்பட்ட 54 ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று வீடு வீடாக கணக்கெடுத்தனர்.

நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் சாதிக்அலி, நத்தம் ஜாபர்அலி, சேட்கனி, சர்புதீன், பசீர்அகமது, ஆரீப்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Last Updated on Thursday, 08 April 2010 09:49
 

நகராட்சிப் பள்ளிக்கு சிறந்த கிராமக் கல்விக்குழு விருது

Print PDF

தினமணி 06.04.2010

நகராட்சிப் பள்ளிக்கு சிறந்த கிராமக் கல்விக்குழு விருது

பவானி, ஏப், 5: குமாரபாளையம் ஜேகேகே.சுந்தரம் நகராட்சிப் பள்ளியின் சிறந்த செயல்பாடுகளுக்காக சிறந்த கிராமக் கல்விக்குழு விருது வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 64-ம், உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 15-ம் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் செயல்பட்டு வரும் கல்விக் குழுவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக செயல்படுவர்.

இக்குழுவினர் கூடி பள்ளியின் வளர்ச்சி குறித்து விவாதித்து பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை வழங்குவர். இக்குழுவின் செயல்பாடுகள், பள்ளியின் நிலை, கல்வித் தரம் குறித்து கண்காணித்து சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்தில் ஒரு பள்ளிக்கு விருது வழங்கப்படும்.

இவ்விருதுக்கு, குமாரபாளையம் ஜேகேகே நகர் நகராட்சித் தொடக்கப் பள்ளியின் கல்விக் குழு பள்ளிபாளையம் ஒன்றியத்தில் சிறந்த குழுவாகத் தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் உ.சகாயம் இக்குழுவுக்கு விருதினை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.

பள்ளித் தலைமையாசிரியர் ஏ.ராஜேந்திரன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.சுப்பிரமணி. பொருளாளர் ஏ.பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 06 April 2010 10:05
 


Page 69 of 111