Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடை - ஷூ

Print PDF

தினமணி 27.03.2010

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடை - ஷூ

சேலம், மார்ச் 26: சேலம் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கான்வென்ட் பள்ளிக் குழந்தைகளுக்கு இணையான சீருடை, ஷூ வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்றும் மேயர் ரேகா பிரியதர்ஷினி அறிவித்தார்.

இதுகுறித்து பட்ஜெட்டில் அவர் மேலும் அறிவித்துள்ளதாவது:

2009-10-ஆம் நிதியாண்டில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 84 பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் 2010-11 ஆம் நிதியாண்டிலும் முன்னுரிமை வழங்கி பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டுகளைப் போலவே 10, 12-ம் வகுப்புகளில் முதல் 25 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்க முன் வருவதில்லை. இந்த குறையைப் போக்கும் வகையில் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அழகான சீருடை அறிமுகப்படுத்தப்படும். கான்வென்ட் குழந்தைகளுக்கு இணையாக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் விதமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் ஏழை குழந்தைகளுக்கு இலவச சீருடை, ஷூ, குடிநீர் எடுத்துச் செல்லும் பாட்டில் வழங்கப்படும். மேலும் மாநகராட்சி இந்திரா காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.50 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்படும்.

அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே முறையில் பெயர்ப் பலகை, ஒரே நிறத்தில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் ஒரு வகுப்பிóல் ஆங்கில வழிக் கல்வி முறை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

37-வது கோட்டம் காமராஜ் நகர் நடுநிலைப் பள்ளி, 50-வது கோட்டம் மணியனூர் நடுநிலைப் பள்ளி, கொண்டலாம்பட்டி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றை உயர் நிலைப் பள்ளியாகவும், மூணாங்கரடு தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் இன்னர் வீல் அமைப்புடன் மாணவர்களுக்கு ஆளுமைப் பண்பு வளர்க்கும் பயிற்சி, உயர் கல்விக்கு வழிகாட்டும் பயிற்சி ஆகியவை அளிக்கப்படும். .

Last Updated on Saturday, 27 March 2010 07:34
 

பள்ளி கட்டடப் பணிகள்: ஜெயதுரை எம்.பி. ஆய்வு

Print PDF

தினமணி 27.03.2010

பள்ளி கட்டடப் பணிகள்: ஜெயதுரை எம்.பி. ஆய்வு

ஸ்ரீவைகுண்டம், மார்ச் 26: தூத்துக்குடி மாவட்டம், பழையகாயலில் உள்ள டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை பார்வையிட்டார்.

அவருடன் உதவிக் கோட்டப் பொறியாளர் என். செல்வராஜ், உதவிப் பொறியாளர்கள் சோமசுந்தரம், சாமுவேல் மற்றும் திமுக பிரமுகர்கள் மாதவன், மாடசாமி, ஹென்றி, மமூது, ராஜேந்திரன், காளிதாஸ், செந்தில் ஆறுமுகம், மாரமங்கலம் ஊராட்சித் தலைவர் காசி, மாநகராட்சி உறுப்பினர் ரகுநாதன், ஏரல் பேருராட்சி உறுப்பினர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Last Updated on Saturday, 27 March 2010 07:32
 

எட்டு மாநகராட்சி பள்ளிகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்

Print PDF

தினமலர் 24.03.2010

எட்டு மாநகராட்சி பள்ளிகளுக்கு ஐ.எஸ்.., தரச்சான்றிதழ்

கோவை: ''கோவை மாநகராட்சிக்கு உட் பட்ட எட்டு மேல்நிலைப்பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டில் ஐ.எஸ்.., தரச்சான்றிதழ் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால்,மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த முடியும்,'' என, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார். கோவை மாநகராட்சி பட்ஜெட் நேற்றுமுன் தினம் தாக்கல் செய்யப் பட்டது. நடப்பு கல்வியாண்டில் எட்டு மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்தி ஐ.எஸ்.., தரச்சான்றிதழ் பெறப்படவுள்ளது. பட்ஜெட்டில் இதற் கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளது. தரச்சான்றிதழ் பெறும் பள்ளிகள்: ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ஆர்.எஸ். புரம் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி(மேற்கு), சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி. இது பற்றி மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், ''இப்பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான வண்ணம் பூசப்படும். நூலகங்கள், கம்ப்யூட்டர் லேப், டைனிங் ஹால், விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும். ''கல்வி கற்பிக்க நவீன உத்திகள் கையாளப்படும். கழிப்பறைகளின் எண்ணிக்கையும் தரமும் மேம்படுத்தப்படும். ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகள் அளிக்கப் படும். ''பள்ளிகளின் தரம் உயர்வதால் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரமும் உயரும். இதன் வாயிலாக மாநகராட்சிப் பள்ளிகளில் படிப்பது பெருமைக்குரிய விஷயமாக மாறும். வரும் ஆண்டுகளில் பிற பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.

Last Updated on Wednesday, 24 March 2010 08:05
 


Page 71 of 111