Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: மாநகராட்சி பள்ளி மாணவியருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

Print PDF

தினமணி 11.03.2010

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: மாநகராட்சி பள்ளி மாணவியருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

மதுரை, மார்ச் 10: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

மதுரை மாநகராட்சி கல்தூண் மண்டபத்தில் இந்த முகாமை தொடங்கிவைத்து ஆணையர் கூறியது:

மதுரை மாநகராட்சியின் 24 பள்ளிகளைச் சார்ந்த, 10}ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெறும் 100 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு, மகால் அருகில் உள்ள மாநகராட்சி திருவள்ளுவர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 10 நாள்களாக நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. இப் பயிற்சி வகுப்பு 10}ம் வகுப்பு தேர்வு முடியும் வரை நடைபெறும்.

இதேபோன்று, 450 மதிப்பெண்களுக்கு மேல் பெறக்கூடிய மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மாநில அளவில் முதலிடம் பெறும் வகையில், பாடம் வாரியாக சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12}ம் வகுப்பு மாணவ, மாணவியர் முதல் 20 இடங்கள் பெறுவோருக்கு, மேல்படிப்பு மற்றும் இதர சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு 10 மற்றும் 12}ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளியின் 11 மாணவ, மாணவியருக்கு துணை முதல்வர் மு..ஸ்டாலின் பரிசு வழங்கி ஊக்குவித்தார். அதுபோல் இந்தாண்டு அதிக மதிப்பெண் பெறுவோர் ஊக்குவிக்கப்படுவர்.

ஆகவே, மாணவ} மாணவியர் 10}ம் வகுப்புத் தேர்வில் நன்கு பயின்று அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று மதுரை மாநகராட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியர் பாலாஜி, மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன், கல்வி அலுவலர் அம்மையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 11 March 2010 09:42
 

நகராட்சி பள்ளி ஆண்டு விழா

Print PDF

தினமலர் 11.03.2010

நகராட்சி பள்ளி ஆண்டு விழா

ஆரணி: நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, நகர கல்விக் குழு தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம் உட்பட பல போட்டிகளும், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன் பரிசுகளை வழங்கி பேசினார். விழாவில், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மணிவாசகம், அன்பழகன், பாலசுந்தரம், ஜெகதீசன் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.உதவி தலைமை ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 11 March 2010 07:00
 

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மாநில ரேங்க் பெற பயிற்சி

Print PDF

தினமலர் 10.03.2010

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மாநில ரேங்க் பெற பயிற்சி

மதுரை: மாநகராட்சி பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மாநில ரேங்க் பெற தனிப்பயிற்சி இன்று முதல் துவங்குகிறது.மாநகராட்சி பள்ளிகளில் அரையாண்டு தேர்வில் மூன்று பாடங்களுக்கு மேல் பெயில் மதிப்பெண் பெற்ற, 100 ஏழை மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே தனிப்பயிற்சி நடக்கிறது. உணவு, தங்கும் இடம் இலவசமாக அளிக்கப்பட்டு, தினமும் தனி வகுப்புகள் நடக்கின்றன.இன்று முதல் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான தனிப்பயிற்சி துவங்குகிறது. மாநகராட்சி பள்ளிகளில் அரையாண்டு தேர்வில் 450 மதிப்பெண் பெற்ற 100 மாணவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சி பில்லர் ஹாலில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தனி வகுப்புகள் நடக்கும். ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் 5 நாட்களுக்கு இப்பயிற்சி நடக்க உள்ளது. சிறப்பு ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் சிலைட் மூலம், பயிற்சி அளிப்பர். இம்மாணவர்களை மாநில ரேங்க் பெற, தயார்படுத்தும் வகையில் இப்பயிற்சி தரப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், மாநகராட்சி கல்வி அலுவலர் அம்மையப்பன் செய்கின்றனர்.

Last Updated on Wednesday, 10 March 2010 06:31
 


Page 75 of 111