Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

படிக்காத, பள்ளிக்கு வராத மாணவர்கள் 12 பேர் மாநகராட்சி பள்ளியிலிருந்து நீக்கம்

Print PDF

தினமலர் 10.03.2010

படிக்காத, பள்ளிக்கு வராத மாணவர்கள் 12 பேர் மாநகராட்சி பள்ளியிலிருந்து நீக்கம்

கோவை : சரியாக பள்ளிக்கு வராத, படிக்காத மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து நீக்கம் செய்யப்பட்டனர். பீளமேட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் 12 பேர் சரியாக பள்ளிக்கு வராததாலும், கால் மற்றும் அரையாண்டு தேர்வுகளில் சிலவற்றில் பங்கேற்காதது, பங்கேற்றதில் போதுமான மதிப்பெண் பெறாதது; ஒழுங்கீனம் ஆகிய காரணங்களுக்காக 12 மாணவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு வரும் 23ம் தேதி துவங்குகிறது. ஹால் டிக்கெட் அனைத்தும் வழங்கிய நிலையில் தேர்வு எழுத அனுமதிக்கவில்லையே என்ற ஏக்கத்தில், மாணவ,மாணவியரின் பெற்றோர் நேற்று கோவை மாநகராட்சி கமிஷனரிடம் நேரில் சென்று விளக்கம் கேட்டனர். தங்களது குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வு எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதற்கு பதிலளித்த கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது: போதுமான வருகைப்பதிவு இல்லாதவர்கள், பருவத்தேர்வுகள், இடைநிலை பருவத்தேர்வுகளில் மதிப்பெண் பெறாதவர்களை எப்படி தேர்வு எழுத அனுமதிக்க முடியும்.எங்களால் தேர்வு எழுத முடியவில்லை என்று சொல்லி தாங்களாக முன் வந்து ஐந்து பேர் மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்றுள்ளனர். மீதமுள்ள ஏழு பேரில் மூன்று பேருக்கு வருகைப்பதிவு இல்லை.

ஒவ்வொருவரும் இரண்டு மாதம் மூன்று மாதம் வரை பள்ளிக்கு வரவில்லை. மற்ற இருவர் குடும்ப சூழலால் தேர்வு எழுத முடியவில்லை என்று சொல்கின்றனர். இப்பிரச்னையை அரசியலாக்க முயற்சித்து சிலர் தூண்டி விட்டுள்ளனர். டி.சி.,கொடுத்த 12 பேரில் யாருக்காவது தேர்வு எழுத வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தயாராகி எழுதட்டும்.நாளை( இன்று) காலை பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தப்படும். . இதில் பெற்றோர்கள் பங்கேற்று தங்கள் குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கும் பட்சத்தில் அனுமதிக்கிறோம். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு அதே பள்ளியில் மாணவர்கள் படிக்க வாய்ப்பு கொடுக்கிறோம். இதை பயன்படுத்திக் கொள்ளட்டும். மாணவர்கள் படிப்பதில் ஆசிரியரை காட்டிலும் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், என்றார் கமிஷனர்.

Last Updated on Wednesday, 10 March 2010 06:30
 

மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் மாணவர் சேர்க்கை: மேயர் தகவல்

Print PDF

தினமணி 06.03.2010

மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் மாணவர் சேர்க்கை: மேயர் தகவல்

சென்னை, மார்ச் 5: சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 1}ம் தேதி முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாநகராட்சிப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி மேயர் மா. சுப்பிரமணியன் பேசியது:

மாநகராட்சிப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1.05 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 199 செலவில் இலவச புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பைகள் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக தர நிர்ணயம் செய்யப்பட்டு, கே.பி.என். நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

இதுபோல் இலவசமாக வண்ணச் சீருடைகள், காலணிகள், அகராதி நூல்கள், மாலை நேர சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள் சோர்வின்றி படிப்பதற்காக பிஸ்கட்டுகள், கவனச் சிதறலை தவிர்ப்பதற்காக யோகா பயிற்சிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், இந்தத் திட்டங்கள் அனைத்தையும் அந்தந்தப் பகுதி மக்களிடம் எடுத்துரைத்து மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதற்காக வடசென்னையிலும், தென்சென்னையிலும் விழிப்புணர்வு பயிலரங்கமும் விரைவில் நடத்தப்பட உள்ளது.

மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றார்

Last Updated on Saturday, 06 March 2010 06:11
 

ரூ.13.50 லட்சத்தில் பள்ளிக்கு வகுப்பறை

Print PDF

தினமலர் 05.03.2010

ரூ.13.50 லட்சத்தில் பள்ளிக்கு வகுப்பறை

திருப்பூர் : தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு, 13.50 லட்சம் ரூபாயில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.தென்னம்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டும் பணிக்காக எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 13.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் ரத்தினசாமி, தலைமை ஆசிரியை தனலட்சுமி, பெற்றோர் ஆசிரிய கழக செயலாளர் பொன்னுசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 05 March 2010 08:31
 


Page 76 of 111