Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி மாணவருக்கு உணவுடன் சிறப்பு வகுப்பு

Print PDF

தினமலர் 23.02.2010

மாநகராட்சி மாணவருக்கு உணவுடன் சிறப்பு வகுப்பு

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மதிப்பெண்களில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுடன் சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான 24 பள்ளிகளில் 2885 மாணவர்கள், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் நூறு பேரை தேர்வு செய்து உணவு அளித்து, தங்க வைத்து, சிறப்பு பயிற்சி அளிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அரையாண்டு தேர்வில் மூன்று பாடங்களுக்கு மேல் பெயில் ஆன மாணவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகால் பந்தடி மாநகராட்சி பள்ளியில் இவர்களுக்கு இன்று முதல் 31.3.10 வரை சிறப்பு வகுப்புகள் நடக்க உள்ளன. பள்ளியிலேயே தங்கவும், மூன்று வேளை உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு தனியாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பயிற்சி தரப்பட உள்ளது. முனிச்சாலை என்.எம். எஸ்.எம்., மாநகராட்சி பெண்கள் மேனிலைப் பள்ளியில் இவர்களுக்கான வகுப்புகள் நடக்கும்.

அறிவுக்கு மரியாதை": மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களை, மாநில ரேங்க் எடுக்க வைக்கும் முயற்சியாக தனி பயிற்சி வகுப்புகளும் நடக்க உள்ளன. இதற்காக 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டங்களை நேற்று மகால் பந்தடி மாநகராட்சி பள்ளியில் கமிஷனர் செபாஸ்டின் நேற்று துவக்கினார். மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், கல்வி அலுவலர் அம்மையப் பன் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:12
 

நகராட்சி பள்ளி ஆண்டு விழா

Print PDF

தினமணி 18.02.2010

நகராட்சி பள்ளி ஆண்டு விழா

ராசிபுரம்
, பிப்.17: ராசிபுரம், பாச்சித்தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. ÷நகரமன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை என்.எஸ்.கஸ்தூரி வரவேற்றார். தலைமை ஆசிரியை ஜி.கலாவதி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக வட்டார வள மைய மேற்பார்வையாளர் வி.ரவி கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி குறித்து பேசினார்.

÷நகரமன்ற உறுப்பினர் மு.கருணாநிதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் வட்டார வளமைய பயிற்றுனர் கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை மு.செல்வகுமாரி நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 18 February 2010 09:38
 

மாநகராட்சி பள்ளி மாணவருக்கு இலவச வினா-விடை புத்தகம்

Print PDF

தினமலர் 17.02.2010

மாநகராட்சி பள்ளி மாணவருக்கு இலவச வினா-விடை புத்தகம்

சேலம்: சேலம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி சார்பில் வினா-விடை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. சேலம் மாநகராட்சி பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலுகின்ற மாணவ, மாணவியரின் கல்வித் திறனை ஊக்கவிக்கும் வகையிலும், அரசு பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் மற்றும் உயர் மதிப்பெண்கள் பெறும் வகையிலும் மாநகராட்சி சார்பில் வினா-விடை புத்தகங்கள் தயாரிக்க கடந்த பட்ஜெட்டில் முடிவெடுக்கப்பட்டது. மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவி சாரதாதேவி மற்றும் உறுப்பினர்களின் மூலம் வினா-விடை வங்கி புத்தகங்களை தயார் செய்யப்பட்டன. இப்புத்தகங்களை பள்ளி மாணவியருக்கு இலவசமாக வழங்கும் விழா நேற்று மாநகராட்சியில் நடந்தது. கமிஷனர் பழனிச்சாமி, துணைமேயர் பன்னீர்செல்வம், உதவி ஆணையாளர்கள் தங்கவேல், நெப்போலியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு மேயர் ரேகா பிரியதர்ஷிணி புத்தகங்களை வழங்கினார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 8,810 புத்தகங்களும், 6,600 வரைப்பட பிரதிகளும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 6,550 புத்தகங்களும் நேற்று வழங்கப்பட்டன.

Last Updated on Wednesday, 17 February 2010 05:33
 


Page 80 of 111