Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.46 லட்சத்தில் ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்க முடிவு

Print PDF

தினமணி 16.02.2010

மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.46 லட்சத்தில் ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்க முடிவு


கோவை, பிப்.15: கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.46 லட்சத்தில் ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்க நிதிக்குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிதி மற்றும் வரி விதிப்புக் குழுக் கூட்டம் குழுத் தலைவர் நந்தகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்). கூட்டத்துக்கு எதிர்கட்சித் தலைவர் வெ.ந.உதயக்குமார், உதவி ஆணையர் (கணக்கு) கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய குழு உறுப்பினர் சோபனா செல்வன், உலகத் தமிழ் மாநாடு நெருங்கி வரும் நிலையில் பட்ஜெட்டுக்கு முன்பாக நிலுவையில் இருக்கும் சொத்து வரியை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மற்றொரு உறுப்பினர் வி.கே.எஸ்.கே.செந்தில்குமார் பேசும்போது, சிவானந்தா காலனி ராஜு சாலை கிழக்குப் புறத்தில் உள்ள பழைய வணிக வளாகம் இருந்த இடத்தில் நவீன வணிக வளாகம் கட்ட தனி நிதி ஒதுக்க வேண்டும். நிலத்தடி மின்கேபிள் அமைக்கப்படும் கிராஸ்கட் சாலை மற்றும் இதர சாலைகளில் கான்கிரீட் கால்வாய்களை மாநகராட்சி நிதியில் இருந்து அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு திட்டச் சாலைகளை அமைக்க பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

மாநகராட்சி மேனிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வுக்கூடங்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்க ரூ.46 லட்சத்துக்கு அனுமதி வழங்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் உதவி ஆணையர் பொன்முடி, மாநகராட்சி கவுன்சில் குழு செயலர் சுந்தர்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 16 February 2010 06:03
 

கம்பம் நகராட்சிப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்: ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி 16.02.2010

கம்பம் நகராட்சிப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்: ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

கம்பம், பிப். 15: தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிக்குச் சொந்தமான 6 பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், இப் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் நகராட்சி நிதி ஒதுக்குவதாகவும் நகராட்சி தலைவர் அம்பிகா பாண்டியன் தெரிவித்தார்.

கம்பத்திலுள்ள தேரடி, மைதீன் ஆண்டவர் பள்ளி, சுங்கம் பள்ளி உள்பட 6 நகராட்சி பள்ளிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பள்ளிகளுக்கு கல்வி நிதியைப் பயன்படுத்த அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கம்பத்திலுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர், மாணவ, மாணவியருக்குத் தனித்தனி கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

புதிதாக அனைத்து வசதிகளும் நிறைந்த கூடுதல் கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை நகராட்சி மைதீன் ஆண்டவர் பள்ளியில் ரூ.14 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டடத்தையும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

கம்பம் நகர்மன்றத் தலைவர் அம்பிகா பாண்டியன் கூறியதாவது: கம்பம் நகராட்சிப் பள்ளிகளில் அனைத்து வசதிகளைஉம் செய்து வருகிறோம்.

கல்விக்காக நகராட்சி மூலம் ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் செலவிட முடிவு செய்து பணிபுரிந்து வருகிறோம் என்றார்.

Last Updated on Tuesday, 16 February 2010 05:38
 

தினமலர் 'ஜெயித்துக் காட்டுவோம்' போல் சென்னை மாநகராட்சி வழிகாட்டி நிகழ்ச்சி

Print PDF

தினமலர் 16.02.2010

தினமலர் 'ஜெயித்துக் காட்டுவோம்' போல் சென்னை மாநகராட்சி வழிகாட்டி நிகழ்ச்சி

சென்னை :""பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, "தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிகளை நடத்தியது போல், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் படும்,'' என்று மேயர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மேயர் சுப்பிரமணியன் பங் கேற்று, இலவச சீருடைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 730 மாணவ, மாணவியருக்கு இரண்டு கோடியே 19 லட்சம் மதிப்பில் இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது.அரசின் சார்பில் ஒரு சீருடை வழங்கினாலும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மாநகராட்சி சார்பில் ஒரு செட் சீருடை வழங் கப்படுகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் சீருடை துணிகள் வழங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.மாநகராட்சி தொடக்கப் பள்ளி களில் படிக்கும் 35 ஆயிரத்து 447 மாணவ, மாணவியருக்கு ரூபாய் 27 லட்சத்து 68 ஆயிரம் செலவில் இலவச ஷூக்கள் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறும்.

மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு, "லேப்-டாப்' வழங்கப்படுகிறது.அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், மூன்று கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் 1,224 கம்ப்யூட்டர் வழங்கப்படும். இதற்காக 248 பள்ளிகளைச் சார்ந்த 1,945 ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப் பட்டது.வரும் 18ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின், 21 கோடி ரூபாய் மதிப்பிலான 88 திட்டப் பணிகளை துவக்க உள்ளார். நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தொடக்கக் கல்வியும் தொடங்கப் படும்.பொதுத் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெறவும், மாணவர்கள் தேர்வு பயத்தை போக்கவும், "தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சிகளை நடத்தியது.

அதுபோல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு தேர்வு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அடுத்த வாரம் நடத்தப் படும்.மாநகராட்சியின் சுகாதாரத் துறை சார்பில், வரும் 20ம் தேதி சென்னையில் 30 இடங்களில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.இதில் அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து மகளிருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.இவ்வாறு மேயர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், துணை கமிஷனர் (கல்வி) பாலாஜி, எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி, கவுன்சிலர்கள், கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

Last Updated on Tuesday, 16 February 2010 02:14
 


Page 81 of 111