Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிதாக 155 ஆசிரியர்கள்: மு.க. ஸ்டாலின்

Print PDF

தினமணி 15.02.2010

மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிதாக 155 ஆசிரியர்கள்: மு.. ஸ்டாலின்


சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் 2009}ம் ஆண்டு 10}ம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளை அளிக்கும் துணை முதல்வர் மு.. ஸ்டாலின். உடன் (இடமிருந்து) முன்னாள் எம்.எல்.. ஜெ. அன்பழகன், மேயர் மா. சுப்பிரமணியன்.

சென்னை, பிப். 14: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் புதிதாக 155 ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்று துணை முதல்வர் மு.. ஸ்டாலின் கூறினார்.

"பிளஸ்}2' மற்றும் 10}ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதலிடம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், நூறு சதவீத தேர்ச்சியை பதிவு செய்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை சர்.பிட்டி தியாகராய அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊக்கத் தொகைகளை வழங்கிய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது:

சென்னை மாநகராட்சி, கல்வித் துறையில் பல்வேறு சிறந்தத் திட்டங்களை வகுத்து வருகிறது. துவக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 730 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.19 கோடி செலவில் புதிய வண்ணத்திலான சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 1.04 கோடி செலவில் புத்தகப் பைகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் 765 ஆசிரியர்களுக்கும், 1300 மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சிறந்த திட்டங்கள் காரணமாக, கடந்த 2006}ம் ஆண்டுக்கு முன்பு மாநகராட்சிப் பள்ளிகளில் 10}ம் வகுப்பு, பிளஸ்}2 பொதுத் தேர்வுகளில் இருந்த 63 சதவீத தேர்ச்சி விகிதம், இப்போது 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதிய ஆசிரியர்கள்: மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் 95 பட்டதாரி ஆசிரியர்கள், 56 உடற்கல்வி ஆசிரியர்கள், 4 இசை ஆசிரியர்கள் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றார். விழாவில் மேயர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன், மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) ஆஷிஷ் சட்டர்ஜி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 15 February 2010 11:15
 

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள்

Print PDF

தினமணி 15.02.2010

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள்

விருத்தாசலம், பிப். 14: விருத்தாசலம் பூதாமூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல் அண்மையில் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவராக ஆசிரியர் கரிகாலன், செயலராக வெங்கடாஜலபதி, பொருளராக சூசை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் துணைத் தலைவராக கிள்ளிவளவன், துணைச் செயலராக செல்வகணபதி, மாவட்ட மகளிரணிச் செயலராக நிர்மலா, பணி நிறைவுச் செயலராக சுந்தரராமன், மாநில செயற்குழு உறுப்பினராக சரவணன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக ஜெயலட்சுமி, தங்கபொண்ணு உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆசிரியர் சந்தானம் தலைமை தாங்கினார், தீனதயாள் முன்னிலை வகித்தார். கம்மாபுரம் வட்டாரச் செயலர் அருள்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் : துணை முதல்வர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 15.02.2010

மாநகராட்சி பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் : துணை முதல்வர் அறிவிப்பு

சென்னை :"சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பட்டதாரி, உடற்கல்வி மற்றும் இசை ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.தனியார் பள்ளிகளை விட மாநகராட்சி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன, '' என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மேற்படிப்பை தொடரும் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, தி.நகரில் புதுப்பிக்கப்பட்ட தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது.ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு, துணை முதல்வர் ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கி பேசியதாவது:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம்,பொறியியல், ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி மற்றும் பி.., - பி.எஸ்.சி., உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது.பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள், தங்கள் பாடப்பிரிவில் 200 மதிப் பெண் பெற்றவர்கள், மாநகராட்சி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள், மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 27 மாணவர்கள் என, அனைவருக்கும் மொத்த ஊக்கத்தொகையாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 250 ரூபாய் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு மொத்த ஊக்கத்தொகையாக ஒன்பது லட்சத்து 72 ஆயிரத்து 250 ரூபாய் வழங்கப்படுகிறது.

இது போல, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சிறந்த தேர்ச்சி விகிதம் காட்டிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் களுக்கு மொத்த ஊக்கத் தொகையாக நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது.மொத்தத்தில் 765 ஆசிரியர்களுக்கும், 1,300 மாணவ, மாணவியருக்கும் ஊக்கத்தொகையாக 24 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 95 பட்டதாரி ஆசிரியர்கள், 56 உடற்கல்வி ஆசிரியர்கள், நான்கு இசை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.தற்போது, மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து, தனியார் பள்ளிகளை காட்டிலும் சிறந்து விளங்குகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கம், 59 லட்சம் ரூபாயில் சிறப்பாக சீரமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.நிகழ்ச்சியில், மாநகர மேயர் சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.., அன்பழகன், மாநகராட்சி இணை கமிஷனர் ஆஷிஷ் சட்டர்ஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 15 February 2010 07:37
 


Page 82 of 111