Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

வரவேற்பு! மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிப்பாடம் : வடசென்னையில் அதிக மாணவர்கள் சேர்க்கை

Print PDF

தினமலர் 09.02.2010

வரவேற்பு! மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிப்பாடம் : வடசென்னையில் அதிக மாணவர்கள் சேர்க்கை

சென்னை : சென்னை மாநகராட்சியால் தொடங்கப்பட்ட ஆங்கில வழி பாடப்பிரிவு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், வரும் பட்ஜெட்டில் ஆங்கில வழி வகுப்புகளை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட், அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இதில், சுகாதாரத் துறைக்கும், கல்வித்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இதில், கல்வித்துறையில் குறிப் பாக, ஆரம்ப பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பாடப்பிரிவு வகுப்புகளை அதிகப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல், சென்னை மாநகராட்சியில் 25 ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில மொழி பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. மண்டலத்திற்கு குறைந்தது இரண்டு பள்ளிகள் வீதம், 10 மண்டலங்களிலும் 24 பள்ளிகளில் தொடங்கப்பட்டன.

இதில், 662 மாணவர்களும், 640 மாணவிகள் என மொத்தம் 1,302 மாணவ மாணவியர் சேர்க்கப்பட் டுள்ளனர். தற்போது, ஆங்கில மொழி பாடப்பிரிவுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வடசென்னையில் கண்ணதாசன் நகர், வில்லிவாக்கம், சி.பி., ரோடு, காரனேசன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கப்பட் டுள்ளனர்.
தென் சென்னையில் சைதாப் பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகளில் மட்டும் அதிகளவு மாணவ மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். திருவான்மியூர் பள்ளியில் ஆங்கில வழி பாடப்பிரிவில், 79 பேரும், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பள்ளியில் 126 பேரும், வேளச்சேரியில் உள்ள பள்ளியில் 136 பேரும் சேர்க்கப் பட்டுள்ளனர். ஆங்கில வழி பாடப்பிரிவுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், வரும் பட்ஜெட்டில் ஆங்கில வழி வகுப்புகளை இரட்டிப்பாக்கலாம் என்று கூறப்படுகிறது.

Last Updated on Tuesday, 09 February 2010 09:22
 

மாணவர்களின் சிறப்புக் கட்டணம் ரத்து: 2 ஆண்டுகளாக அரசு நிதியை எதிர்பார்த்திருக்கும் மாநகராட்சி பள்ளிகள்

Print PDF

தினமணி 09.02.2010

மாணவர்களின் சிறப்புக் கட்டணம் ரத்து: 2 ஆண்டுகளாக அரசு நிதியை எதிர்பார்த்திருக்கும் மாநகராட்சி பள்ளிகள்

சென்னை, பிப். 8: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போல், மாநகராட்சிப் பள்ளிகளிலும் ரத்து செய்யப்பட்ட மாணவர்களின் சிறப்புக் கட்டணத்தை தமிழக அரசு எப்போது அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களுடைய சொந்த பணத்தைச் செலவு செய்து பள்ளிக்குத் தேவையான எழுது பொருள்கள், விளையாட்டு உபகரணங்கள், ஆய்வுக்கூட உபகரணங்களை வாங்கும் நிலைக்கு தலைமை ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், மாநகராட்சிப் பள்ளிகளிலும் மாணவர்களிடையே ஒரு குறிப்பிட்டத் தொகை சிறப்புக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டணம் ரூ.58-ம், 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.72}ம், 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் ரூ.128-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்தக் கட்டணத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கட்டணம், எழுது பொருள் கட்டணம், விளையாட்டு உபகரணக் கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம், சேவைக் கட்டணம், ஜூனியர் செஞ்சிலுவைக் கட்டணம் உள்ளிட்டவை அடங்கும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று 2008}09-ம் கல்வி ஆண்டில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளிடமும் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட இந்தத் தொகையை பள்ளிகளுக்கு தமிழக அரசு அளித்து வருகிறது.

அரசாணையில் மாநகராட்சிப் பள்ளிகள் குறித்து குறிப்பிடாதபோதும், அரசாணை அமலுக்கு வந்த தேதி முதல் மாநகராட்சிப் பள்ளிகளிலும், அனைத்து மாணவர்களிடமும் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது.

இருந்தபோதும், பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் ரூ.25 மட்டும் மாணவர்களிடம் இப்போது வசூலிக்கப்படுகிறது.

மேலும், ஜூனியர் செஞ்சிலுவைக் கட்டணம் மற்றும் விளையாட்டுக் கட்டணமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.4-ம், 9, 10}ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 6-ம், 11, 12}ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.10 வீதமும் பள்ளிகள் அரசுக்கு செலுத்த வேண்டும்.

எனவே, பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் மற்றும் ஜூனியர் செஞ்சிலுவைக் கட்டணம், விளையாட்டுக் கட்டணங்களைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகையை பள்ளிகளுக்கு அரசு அளிக்க வேண்டும்.

கட்டணம் ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ.29 வீதமும், 9, 10}ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.41 வீதமும், 11, 12}ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.93 வீதமும் பள்ளிகளுக்கு அரசு அளிக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்ட கட்டணங்களை மாநகராட்சி அதிகாரிகள் அரசிடமிருந்து பெற்றுத் தரவில்லை. இதனால் பள்ளிகளுக்குத் தேவையான எழுது பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், ஆய்வக உபகரணங்களை தங்கள் சொந்த பணத்தைக் கொண்டு தலைமை ஆசிரியர்கள் வாங்கி வருகின்றனர்.

பணம் இல்லாததால், சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் இந்த அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதை தவிர்த்து விடுகின்றனர். எனவே, பள்ளிக்கு வந்து சேரவேண்டிய தொகையை விரைந்து அரசிடமிருந்து அதிகாரிகள் பெற்றுத் தர வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழக அரசிடம் இதுதொடர்பாக தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். ஆனால், எந்த பதிலும் அரசு அதிகாரிகளிடமிருந்து வரவில்லை என்றார்.

Last Updated on Tuesday, 09 February 2010 07:02
 

பள்ளியில் தயாராகிறது விளையாட்டு அலுவலகம்

Print PDF

தினமலர் 08.02.2010

பள்ளியில் தயாராகிறது விளையாட்டு அலுவலகம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலகம், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள், தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன.

திருப்பூர் மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின், ஒவ்வொரு துறைக்கும் புதிய அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட துவங்கி வருகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலராக, கடந்த மாதம் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். தற்போது, மாவட்ட விளையாட்டு அலுவலகம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைப்பதற்கான பணிகள் நடத்து வருகின்றன.

மாவட்ட விளையாட்டு அலுவலர் வெங்கட்ராமன் கூறுகையில்,""மாவட்ட விளையாட்டு அலுவலகம் நஞ்சப்பா பள்ளியில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் முழு வேகத்துடன் நடந்து வருகிறது. மின் இணைப்புக்கான பணிகள் செய்யப்பட வேண்டும். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மாவட்ட விளையாட்டு அலுவலகம் விரைவில் திறக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Monday, 08 February 2010 06:15
 


Page 83 of 111