Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளிகளில் மாறுகிறது சீருடை நிறம்

Print PDF

தினமலர் 21.01.2010

மாநகராட்சி பள்ளிகளில் மாறுகிறது சீருடை நிறம்

கோவை : கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் சீருடை நிறத்தை மாற்ற, கல்விக்குழு தீர்மானித்துள்ளது.

மாநகராட்சி கல்விக்குழு கூட்டம், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. குழு தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார். மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியரை பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்க, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது; மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற தயார் படுத்திட உபகரணங்கள் வழங்குவது; பள்ளி மைதானங்களை தயார் படுத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தற்போது அணியும் சீருடை நிறத்தில் மாற்றம் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், 45 பள்ளிகளில் செயல்வழி கற்றல் முறையில் படிக்கும் மாணவர்களுக்கு வட்ட வடிவ டேபிள், இருக்கைகளை அமைக்க 24.5 லட்சம் செலவில் பைபரில் (கல்நார்) தயாரிக்கப்பட்ட மேஜை, இருக்கைகளை வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், கவுன்சிலர்கள் ஷோபனா, சிவகாமி, மீனா, தமிழ்ச்செல்வி, செல்வராஜ், செந்தில், மாநகராட்சி கல்வி அலுவலர் (பொறுப்பு) ராஜூ, பொறியாளர்கள் சுகுமாரன், கணேஷ்வரன், உயிரியல் பூங்கா இயக்குனர் பெருமாள்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 21 January 2010 07:40
 

இலவச தியான பயிற்சி துவக்க விழா

Print PDF

தினமலர் 21.01.2010

இலவச தியான பயிற்சி துவக்க விழா

சென்னை : ""மாணவர்கள் கல்வியில் சாதிக்க, உடல் மற்றும் மன நலத்தைக் காப்பது அவசியம்,'' என மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் பேசினார். மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான இலவச மனதாய்வு மற்றும் தியான பயிற்சி துவக்க விழா, மேற்கு மாம்பலத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில் மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: வேதாந்த மகரிஷி ஆசிரமத்தில் பயிற்சி பெற்ற 100 மாநகராட்சி பள்ளி ஆசிரியர் கள் மூலம், அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் மனவலிமையை மேம் படுத்தும் வகையில், சன்மார்க்கா பவுண் டேசன்ஸ் சார்பில், இலவச மனதாய்வு மற்றும் தியான பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்டமாக, 10 மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இப் பயிற்சி தரப்பட உள்ளது. மாணவர்கள் கல்வியில் சாதிக்க, உடல் மற்றும் மன நலத்தைக் காப்பது அவசியம். மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆயிரம் மாணவர்களுக்கு, தலா 165 ரூபாய் மதிப்பில் இலவச அகராதியும், சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை, பை மற்றும் காலணிகளும் இம்மாதத்திற்குள் வழங்கப்படும். இவ்வாறு சுப்ரமணியன் பேசினார். விழாவில், மாநகராட்சி துணை மேயர் சத்தியபாமா, ஆணையர் ராஜேஷ் லக்கானி, சன்மார்க்கா பவுண்டேசன்ஸ் நிறுவனர் சங்க மித்ரா அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 21 January 2010 07:26
 

மாணவியருக்கு பொங்கல் வாழ்த்து

Print PDF

தினமணி 12.01.2010

மாணவியருக்கு பொங்கல் வாழ்த்து

பொள்ளாச்சி
, ஜன. 11: பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்குப் பொங்கலை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரத்தை நகர்மன்றத் தலைவி டி.ராஜேஸ்வரி திங்கள்கிழமை வழங்கினார் (படம்). சுமார் 100 ஆண்டுகள் ஆன பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கோட்டூர் சாலையில் ரூ.8.40 கோடி செலவில் தமிழகத்திலேயே முன் மாதிரியாகக் கட்டப்பட்டது. இப்பள்ளிக்கு ஐ.எஸ்.. தரச்சான்றும் பெறப்பட்டது.

இப்பள்ளி கடந்த 4-ம் தேதி முதல் புதிய கட்டடத்தில் செயல்படுகிறது.

பள்ளி புதிய கட்டடத்தில் செயல்படுவதை முன்னிட்டுப் பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவி டி.ராஜேஸ்வரி மாணவியருக்குப் பொங்கல் வாழ்த்துகளையும், இனிப்பு மற்றும் காரத்தையும் திங்கள்கிழமை வழங்கினார்.

நிகழ்ச்சியில்,முன்னாள் எம்.எல்.. எஸ். ராஜூ, நகர்மன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், கெüதமன், மெக்சன் மணி, செண்பகம், ராதா, மீனாட்சி செவ்வேள் ஆகியோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 12 January 2010 09:51
 


Page 88 of 111