Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பொள்ளாச்சியில் 8.4 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலைப்பள்ளி கட்டடம் திறப்பு

Print PDF

தினமலர் 05.01.2010

பொள்ளாச்சியில் 8.4 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலைப்பள்ளி கட்டடம் திறப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் 8.4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடம் நேற்று பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பழுதடைந்த கட்டடத்தில் செயல் பட்டு வந்தது. பெண்கள் பள்ளிக்கு கோட்டூர் ரோட்டில் 11 ஏக்கர் பரப்பில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நகராட்சி முடிவு செய்தது. தற்போது, 8.42 கோடி மதிப்பீட்டில் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள் ளது. இரண்டு மாடி கட்டடத்தில் ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதான வசதியுடன் புதிய பள்ளி கட்டப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டத்திற்கு மாநிலத்தில் முதல் முறையாக "ஐஎஸ்ஓ' தரச்சான்று பெறப் பட்டுள்ளது. பள்ளி கட்டடத்தை துணை முதல்வர் ஸ்டாலின் நவம்பர் மாதம் திறந்து வைத்தார். புதிய பள்ளி கட்டடத்தில் அனைத்து அடிப் படை வசதிகளும், மாணவிகளுக்கான இருக்கை வசதிகளும் நிறைவு செய்யப்பட்ட நிலையில் நேற்று (4ம் தேதி) பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. வகுப்புகள் துவங்கும் முன்பாக புதிய கட்டடத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரவடிவேல் வரவேற்றார். நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி, நகராட்சி கமிஷனர் வரதராஜ், முன்னாள் எம்.எல்... ராஜூ பள்ளியின் சிறப்பு பற்றியும், சுகாதாரத்தையும், தூய்மையையும் பேணிக்காத்து கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

அதன்பின், வகுப்புகள் துவங்கப்பட்டது. புதிய பள்ளிக்கட்டடம் செயல்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதை நகராட்சிகளின் நிர்வாக செயலாளர் நிரஞ்சன் மார்டி, நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் செந்தில்குமார், கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.பள்ளியின் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், தலைமை ஆசிரியர் அறை, ஆலோசனை கூட்ட அரங்கு, பார்வையாளர்கள் அறைகளை பார்வையிட்டனர். பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தை நகராட்சிகளின் நிர்வாக செயலாளர் திறந்து வைத்தார். பள்ளியின் பின்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான வரைபடத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

Last Updated on Tuesday, 05 January 2010 07:09
 

புதிய நகராட்சிக் கட்டடத்தில் இன்று முதல் மகளிர் மேல்நிலைப்பள்ளி

Print PDF

தினமணி 04.01.2010

புதிய நகராட்சிக் கட்டடத்தில் இன்று முதல் மகளிர் மேல்நிலைப்பள்ளி

பொள்ளாச்சி, ஜன. 3: பொள்ளாச்சி நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி திங்கள்கிழமை முதல் ரூ.8.42 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்க உள்ளது.

சுமார் 100 ஆண்டு காலப் பழமை மிக்க கட்டடத்தில் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. போதுமான இட வசதி இல்லாததால் கோட்டூர் சாலையில் 11 ஏக்கர் பரப்பளவில் உள்ள புதிய இடத்தில் கட்டடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. ரூ.8.42 கோடி செலவில் இக்கட்டடம் கட்டப்பட்டது. 2 மாடியில் ஆய்வகம், வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டடத்தைத் தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதத்தில் திறந்து வைத்தார்.

தமிழகத்திலேயே முதன் முதலாக பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ஐ.எஸ்.. தரச்சான்று வாங்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட நிலையில் இப்புதிய கட்டடத்தில் திங்கள்கிழமை முதல் பள்ளி செயல்பட உள்ளது. நகராட்சி நிர்வாகச் செயலர், நிர்வாக ஆணையாளர், தலைமைப் பொறியாளர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்டோர் திங்கள்கிழமை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

Last Updated on Monday, 04 January 2010 09:01
 

பெரியசேமூர் நகராட்சியில் என்எஸ்எஸ் முகாம்

Print PDF

தினமணி 04.01.2010

பெரியசேமூர் நகராட்சியில் என்எஸ்எஸ் முகாம்

ஈரோடு, ஜன. 3: ஈரோடு மாவட்டம், பெரியசேமூர் நகராட்சிக்கு உள்பட்ட தண்ணீர்பந்தல்பாளையம், நெசவாளர்காலனி, சூளை, சின்னசேமூர் பகுதிகளில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் ஒரு வாரம் நடைபெற்றது.

இதையொட்டி கோயில் சீரமைப்பு, நூலகப் பராமரிப்பு, சாலை தூய்மை, பள்ளி வளாகச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. மேலும் வேலைவாய்ப்பு, கல்வி மேம்பாடு, மகளிர் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

முகாம் நிறைவு விழா சூளை செல்லியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இர.பாஸ்கரன் தலைமை வகித்தார். பெரியசேமூர் நகராட்சித் துணைத் தலைவர் ப.சுப்பிரமணி முன்னிலை வகித்தார். பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரித் தாளாளர் என்கேகே.பெரியசாமி சிறப்புரையாற்றினார். கோவை பாரதியார் பல்கலை. நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.செல்லசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவியருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முகாமிற்கான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் ப.கமலக்கண்ணன், ஆர்.மோகன்ராஜ், சி.அங்கயற்கண்ணி, அர.ஜோதிமணி செய்திருந்தனர். முகாமின்போது ஒவ்வொரு நாளும் பல்வேறு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் நாளும் நூலகம் செல்வோம், மனமே செயல், என்னைச் செதுக்கியவர்கள், படித்தேன் உயர்ந்தேன், மறைந்து வரும் மனிதநேயம் என்ற தலைப்புகளில் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இரா.சீனிவாசன், பேராசிரியர்கள் க.இராக்கு, சா.சிவமணி, .மணிகண்ணன், இரா.விஸ்வநாதன், தியாகராஜன், சதீஷ்குமார், .ரேவதி பேசினர்.

Last Updated on Monday, 04 January 2010 09:00
 


Page 90 of 111