Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பள்ளி கட்டிடத்தை ஆய்வு

Print PDF

தினகரன் 31.12.2009

பள்ளி கட்டிடத்தை ஆய்வு

காமராஜர் பிறந்தநாள் விழாவில் பெறப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பழமையான கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்டித்தர உறுதியளித்திருந்தார். இவரது முயற்சியில் நபார்டு திட்டத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கட்டட பணிகளை வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வகுப்பறை, கழிப்பறை, தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம் கட்டப்பட உள்ள இடங்களையும் ஆய்வு செய்தார். கட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். வகுப்பறைக் கதவுகள் காற்றோட்டத்துக்காக பாதி திறக்கும் வகையில் தனித்தனியாக அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.

Last Updated on Thursday, 31 December 2009 06:19
 

அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கட்டிடம்

Print PDF

தினமலர் 29.12.2009

அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கட்டிடம்

சேலம்: சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த விழாவில் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 57 மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 2 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. சேலம் கோட்டை மகளிர் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். பிறகு அவர், நிருபர்களிடம் கூறும்போது, ""சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 41 வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்பட உள்ளன. தவிர, தண்ணீர் வசதியுடன் கூடிய 10 கழிப்பறைகள், இரண்டு ஆழ்துளை கிணறுகள், பள்ளியை சுற்றி 560 மீட்டர் நீளம் கொண்ட சுற்றுச்சுவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை கட்டப்பட உள்ளது.

ஆறு மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டிட பணிக்காக பூம்புகார் கைவினை பொருட்கள் அங்காடி தற்காலிகமாக காதி அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது. பூம்புகார் கைவினை பொருட்கள் அங்காடி கட்டுவதற்கு சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் அருகில் 3,700 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார். ஆய்வின் போது, மேயர் ரேகாபிரியதர்ஷினி, டி.ஆர்.., ராஜரத்தினம், மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Last Updated on Tuesday, 29 December 2009 09:39
 

ஆசிரியைக்கு அடையாள அட்டை...

Print PDF

தினமணி 24.12.2009

ஆசிரியைக்கு அடையாள அட்டை...

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைக்கு அடையாள அட்டை வழங்குகிறார் மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன். உடன் (இடமிருந்து)

துணை ஆணையர் (கல்வி) பாலாஜி, துணை மேயர் சத்யபாமா. இதில் மாணவ}மாணவியருக்கு தர அடையாள முத்திரைகள், பிஸ்கெட்டுகள் வழங்கப்பட்டன.

Last Updated on Thursday, 24 December 2009 10:35
 


Page 91 of 111