Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.5 லட்சத்தில் வசதிகள்

Print PDF

தினமணி 24.12.2009

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.5 லட்சத்தில் வசதிகள்

குடியாத்தம், டிச. 23: குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.5 லட்சம் செலவில் மேம்பாட்டு வசதிகளை செய்துதருவதற்கு அம்பாலால் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

பள்ளியை இந்த அறக்கட்டளை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துக் கொண்டுள்ளது. இதற்காக அறக்கட்டளை நிர்வாகிகள் ஏ. பாரஸ்மல் ஜெயின், . கேவல்சந்த் ஜெயின் ஆகியோருக்கு பள்ளியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விóழா நடைபெற்றது.

திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் சௌதாமணி, புரவலர்களை பாராட்டி சால்வை அணிவித்தார். நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் வி. கணேசன் வரவேற்றார். பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்துதல், இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தினமும் சிற்றுண்டி வழங்குதல், மாணவர்களுக்கு இலவச நவீன கல்வி உபகரணங்கள் வழங்குதல், மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்க பல்வேறு பயிற்சிகளை நடத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை செய்து தருவதாக பள்ளிப் புரவலர்கள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 24 December 2009 10:19
 

மாணவர்களுக்கு விரைவில் இலவச மூக்கு கண்ணாடி

Print PDF

தினகரன் 24.12.2009

மாணவர்களுக்கு விரைவில் இலவச மூக்கு கண்ணாடி

Swine Fluசென்னை : மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை, மாணவிகளுக்கு தர அடையாள முத்திரை, பிஸ்கெட்டுகள் வழங்கும் விழா சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. இவற்றை வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பில் முதல் 25 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கிறது. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பெறும் மாணவர்களுக்கு 500 வீதம் அரசு வழங்குகிறது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் மாநகராட்சி பள்ளிகள் செயல்படுகின்றன. 100 சதவீத தேர்ச்சி கொண்டுவருவதே எங்கள் நோக்கம். பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார். இவ்வாறு மேயர் பேசினார். நிகழ்ச்சியில், துணை மேயர் சத்தியபாபா, துணை ஆணையர் (கல்வி) எம்.பாலாஜி, மன்ற எதிர் கட்சி தலைவர் சைதை ப.ரவி, நிலைக்குழு தலைவர் (கல்வி) கே.ஜானகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 24 December 2009 06:17
 

ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளிக்கு தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள்

Print PDF

தினமணி 19.12.2009

ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளிக்கு தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள்

திருப்பூர், டிச.18: குறைந்த விலையில் நாப்கின்கள் பெறவும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை சுற்றுச் சூழலுக்கு கேடில்லாமல் அப்புறப்படுத்தவும் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளிக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 2 நாப்கின் வழங்கும் இயந்திரங்களை முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் மணியம் ஹார்டுவேர் சார்பில் வழங்கப்பட்டது.

÷60 சதவீத பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற துணிகளை பயன்படுத்துவதே காரணம் என மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

சுகாதாரமான நாப்கின்களை பயன்படுத்துவதன் மூலம் இந்நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

÷இந்நிலையில், கடைகளில் 8 நாப்கின்கள் கொண்ட பாக்கெட்டின் விலை ரூ.20- க்கு விற்கப்படுவதால் ஏழைப் பெண்களால் அவற்றை வாங்க முடிவதில்லை. இப்பிரச்னை யை தவிர்க்க, முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான தானியங்கி நாப்கின் வென்டிங் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

÷இந்த இயந்திரத்தில் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை போட்டால் ஒரு நாப்கின் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத வகையில் அப்புறப்படுத்த நாப்கின் பர்னிங் இயந்திரமும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு நாப்கின் வென்டிங் மற்றும் பர்னிங் இயந்திரம் மணியம் ஹார்டுவேர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

÷இந்த இயந்திரங்கள் பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடந்தது.

பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயாஆனந்தம் தலைமை தாங்கினார். இயந்திரங்களை மாவட்ட சுகாதாரத்துறை இணை விஜயலட்சுமி வழங்க பள்ளி தலைமையாசிரியர் பெற்றுக் கொண்டார்.

தொழிலதிபர் சுமன்சந்திரகுமார்ஆசர், மருத்துவர் பிரியாவிஸ்வம், முயற்சி மக்கள் அமைப்பு தலைவர் சிதம்பரம், மணியம் ஹார்டுவேர் நிறுவனர் ராமசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 92 of 111