Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நகராட்சிப் பள்ளியில் மனித உரிமைக் கல்வி பயிற்சி

Print PDF

தினமணி 23.11.2009

நகராட்சிப் பள்ளியில் மனித உரிமைக் கல்வி பயிற்சி

தேவகோட்டை, நவ. 22: தேவகோட்டை நகராட்சி 16-வது தொகுதி பள்ளியில், மனித உரிமைக்கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, கூடுதல் உதவி கல்வி அலுவலர் பரிமளம் தலைமை வகித்தார். கிராம கல்விக்குழு தலைவர் கவுன்சிலர் இளங்கோ முன்னிலை வகித்தார். மனித உரிமைக் கல்வி ஆசிரியர் ராமராஜ் வரவேற்றார். குழந்தைக் கல்வி உரிமை குறித்து, நகரமைப்பு ஆய்வாளர் கவிஞர் நாகைநாகராஜ் பேசினார். மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. அன்புக்கனி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹேமலதா, ஞானசெüந்தரி, அன்னகுஞ்சரம் ஆகியோர் செய்தனர்.

Last Updated on Monday, 23 November 2009 06:39
 

மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளியில் புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி 21.11.2009

மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளியில் புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு

மேட்டுப்பாளையம், நவ.20: மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் பவரிபாய் பவர்லால் அறக்கட்ட ளை சார்பில் பகவான் மகாவீர் நகராட்சி பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளிகட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கர் நகரிலுள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரமன்றத்தலைவி சத்தியவதிக ணேஷ் தலைமை தாங்க, நகராட்சி ஆனையர் சுந்தரம், நகரமன்ற துனைத்தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் வேலன், முகமதுஉசேன் முன்னிலை வகித்தனர். பவர்லால் அறக்கட்டளை அறங்காவலர் நவரத்தன்மல் சாங்லா வரவேற்றார்.

தொழிலதிபர் என். கிருஷ்ணசாமி புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார்.

விழாவில் எம்எல்ஏ ஓகே சின்னராஜ், முன்னாள் எம்எல்ஏ அருண்குமா ர், உதவி தொடக்ககல்வி அலுவலர் பீமராஜூ, கூடுதல்உதவி தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், அனைவருக்கும் கல்விஇயக்க மேற்பார்வையாளர் நல்லபாக்கியலெட், காரமடை ஒன்றியக்குழு தலைவர் ராஜ்குமார், கவுன்சிலர்கள் பழனிசாமி, உமா,உசேன், பள்ளிதாளாளர் ரூபன் சுகுமார்,ஆசிரியை கிரிஜா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் நகராட்சி பள்ளிக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய பவரிபாய் பவர்லால் அறக்கட்டளை நிர்வாகிகள் நவ்ரத்தன்மல், மகாவீர்சந்த், ரமேஷ்சந்த், விமல், கியான், ராஜ்குமார் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர், நகராட்சி சார்பில் பாராட்டி, கெüரவிக்கப்பட்டனர்.

விழாவில் நகர ரோட்டரிதலைவர் ஸ்ரீராம், முன்னாள் தலைவர்கள் துரைராஜ், கேப்டன்துரை, அரிமா மாவட்ட நிர்வாகிகள் பிஎன் ராஜேந்திரன், வின்சென்ட் வேதராஜ், டாக்டர். காஜா மொய்தீன், வக்கீல் வீரபத்திரன், நகர கட்சிகள் சார்பில் கணேஷ், மீனாஹரி ராமலிங்கம், ரஹமதுல்லா, குணசேகரன், சிவாஜிமணி (காங்), கதிரவன், அமீது, சேனாதிபதி (திமுக),வான்மதிசேட், வெள்ளிங்கிரி (அதிமுக) உட்பட ஆசிரியைகளும், மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியை அமுதா நன்றி கூறினார்.

 

சென்னை மாநகராட்சி பள்ளியில் விழிப்புணர்வு பொம்மலாட்டம் நிகழ்ச்சி

Print PDF

தினமலர் 21.11.2009

 


Page 95 of 111