Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

5 நகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.24 லட்சம் நிதி

Print PDF

தினமணி                 01.08.2012

 5 நகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.24 லட்சம் நிதி

மயிலாடுதுறை, ஜூலை 31: மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 5 நகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவும், அடிப்படை வசதிகளைச் செய்யவும்  நகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ. 24 லட்சம் ஒதுக்கீடு  செய்வதற்கு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மயிலாடுதுறை நகர்மன்றக் கூட்டம், தலைவர்  எஸ். பவானி  தலைமையில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்  உறுப்பினர்கள் பேசியது:

ரமேஷ்: நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், பழுதடைந்துள்ள சாலைகளை  சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். க. ரகு: காமராஜர் பேருந்து நிலையம் அருகில் மிகப்பெரிய அளவில் நகராட்சியின்  அனுமதி பெறாமல்  டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள்  சரிந்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிஜிட்டல் பேனர் வைப்பதை  தடுக்க வேண்டும்.

ராஜேந்திரன்: கச்சேரி  சாலையில்  மக்கள் அதிக அளவில் வந்து போவதால், இந்தப் பகுதியில்  சுகாதார வளாகம் அமைத்து, நகர்  தூய்மை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வை. தனபால்: சின்னக்கடைவீதி,மகாதானத் தெரு சந்திப்பில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த வழியாகச் செல்லும் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கும்  இடையூறு  ஏற்படுவதால், கடையை  அகற்றவேண்டும்.

ஜி.கோவிந்தராஜன்: சித்தர்க்காடு பகுதியில்  விநியோகம் செய்யப்படும் குடிநீர் மாசடைந்து  காணப்படுவதால் பொது மக்கள்  நோயுறும் நிலை உருவாகியுள்ளது. கூட்ட முடிவில், மயிலாடுதுறை நகராட்சியின் கீழ் செயல்படும், திருவிழந்தூர் நகராட்சித் தொடக்கப்பள்ளியில்   கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 4.50 லட்சம், கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி  கட்டடங்கள்  பராமரிப்பிற்கு  ரூ. 4 லட்சம்,  தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டடம் மற்றும் சுகாதார  வளாகம்  மற்றும் புதிய வகுப்பறைகள்  கட்டுவதற்கு   ரூ. 13 லட்சம், கூறைநாடு எரகாலித் தெரு நகராட்சி பள்ளி கட்டடம் பராமரிப்புக்கு ரூ. 1 லட்சம் ஆகியவை நகராட்சி கல்வி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: 3 மாநகராட்சி பள்ளிகளுக்கு ரொக்க பரிசு

Print PDF

தினமலர்                 27.07.2012

 பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: 3 மாநகராட்சி பள்ளிகளுக்கு ரொக்க பரிசு

சென்னை : அரசு பொதுத்தேர்வில், முழு தேர்ச்சி பெற்ற மூன்று மாநகராட்சி பள்ளிகளுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வில் முழு தேர்ச்சி பெறும் பள்ளிக்கு, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என, மாநகராட்சி அறிவித்திருந்தது. கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், நெசப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்புத் தேர்வில், மயிலாப்பூர் கே.பி.தெரு உயர்நிலைப் பள்ளி, கண்ணம்மா பேட்டை உயர்நிலைப் பள்ளி என, மூன்று பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றன.இந்த பள்ளிகளுக்கு, தலா ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசை மாநகராட்சி வழங்கியுள்ளது. இதற்கு மன்றத்தில், அனுமதி அளிக்கப்பட்டது.
 

மாநகராட்சி பள்ளிகளில் 85 சதவீத தேர்ச்சி

Print PDF

தினகரன்       21.01.2011

மாநகராட்சி பள்ளிகளில் 85 சதவீத தேர்ச்சி

சென்னை, ஜன. 21:

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது.

மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட 2514 பேருக்கு ரூ.28 லட்சத்து 55 ஆயிரத்து 750 ஊக்கத் தொகை வழங்கினார். சுமார் ஒன்றரை மணி நேரம் மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் துணை முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது:

மாநகராட்சி பள்ளிகளில் கல்வித் தரம் 1996க்கு முன் எப்படி இருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். பையன் கெட்டுப் போக வேண்டுமானால் மாநகராட்சி பள்ளியில் சேர் என்று கூறும் அளவுக்கு அப்போதைய கல்வித் தரம் இருந்தது. 1996க்குப் பின் தனியார் பள்ளிகளை வெல்லும் அளவுக்கு மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தகுதி உயர்ந்தது.

முன்பெல்லாம் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு வி.ஐ.பி.க்களின் சிபாரிசுக் கடிதங்களை பெறும் நிலை இருந்தது. இப்போது மாநகராட்சி பள்ளிகளில் சேர்ப்பதற்கு சிபாரிசு படிதங்கள் பெறும் நிலை உள்ளது.

கால் நூற்றாண்டுக்குப் பின் மாநகராட்சி தேர்தல் நடத்தி மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு சீருடை, தரமான கல்வி, இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை பரிசாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் காரணமாக 1996ல் மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 56 சதவீதமாக இருந்தது. அரசின் முயற்சியால் அது 69 சதவீதமாக உயர்ந்தது. 2001 & 2002ல் 10ம் வகுப்பில் 50 சதவீதமும் 12ம் வகுப்பில் 73 சதவீதமாகவும் தேர்ச்சி விகிதம் உயர்ந்தது. 2009 & 2010ல் இரு வகுப்புகளிலும் தேர்ச்சி விகிதம் 85 சதவீதமாக உயர்ந்துள்ளது. இப்போது நான் சென்னை மேயராக இல்லையே என்ற ஏக்கம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் மாநகராட்சி கல்வித் துறைக்கு குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டது.

ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், மேல் படிப்பு தொடர ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிக்கும் 25 மாணவர்களுக்கு தலா ரூ.25000 வீதம் ரூ.6.2 லட்சமும், ஆசிரியர், செவிலியர் படிப்பு படிக்கும் 11 பேருக்கு தலா ரூ.5000 .ஏ., பி.எஸ்.சி., படிக்கும் 50 பேருக்கு தலா ரூ.3000, முதல் முறையாக பட்டயப் படிப்பு படிக்கும் 20 பேருக்கு தலா ரூ.3000, வழக்கறிஞர் படிப்பு படிக்கும் ஒருவருக்கு ரூ.5000, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 1257 பேருக்கு ரூ.12 லட்சத்து 15 ஆயிரத்து 500, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 222 பேருக்கு ரூ.2 லட்சத்து 2250, தேசிய குழந்தை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 6 பேருக்கு தலா ரூ.1000, 10ம் வகுப்பில் அதிக தேர்ச்சி கண்ட 586 ஆசிரியர்களுக்கு 3 லட்சத்து 30 ஆயிரம், 12ம் வகுப்பு ஆசிரியர்கள் 330 ஆசிரியர்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், தலைமை ஆசிரியர்கள் 5 பேருக்கு ரூ. 23 ஆயிரம் மற்றும் கேடயங்கள் வழங்கப்படுகின்றன.

1592 மாணவ மாணவிகளுக்கு ரூ.23 லட்சத்து 22 ஆயிரத்து 750, 922 ஆசிரியர்களுக்கு ரூ.5 லட்சத்து 33 ஆயிரம் என்று மொத்தம் 2514 பேருக்கு ரூ.28 லட்சத்து 55 ஆயிரத்து 750 இன்று வழங்கப்படுகிறது. வழக்கமாக 10 பேருக்கு பரிசுகளை அடையாளமாக வழங்குவார்கள்.
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அவர்கள் எத்தனை பேர் என்றாலும் நானே பரிசுகளை வழங்குவேன். அது போல இன்று மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்க இருக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவிற்கு வந்தவர்களை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வரவேற்றார். அமைச்சர் ஆற்காடு வீராசாமி வாழ்த்திப் பேசினார்.

 


Page 25 of 111