Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளிகளுக்கு 100 இலவச கம்ப்யூட்டர்கள்

Print PDF

தினமலர்      07.01.2011

மாநகராட்சி பள்ளிகளுக்கு 100 இலவச கம்ப்யூட்டர்கள்

மதுரை : மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளுக்கு ஐ.பி.எம்., நிறுவனம் சார்பில் 100 இலவச கம்ப்யூட்டர்கள் வழங்குவதற்கான ஒப்பந்தம் மேயர் தேன்மொழி தலைமையில் நடந்தது.

கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது:ஐ.பி.எம்., கம்ப்யூட்டர் நிறுவனம் தனது லாபத்தின் ஒரு பகுதியை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்கிறது. மதுரை மாநகராட்சியிலுள்ள 20 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காக 100 கம்ப்யூட்டர்களையும், அதற்கான பாடதிட்ட மென்பொருட்கள், மேசை, நாற்காலிகள் இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதற்காக 20 ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. விரைவில் இந்த கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும், என்றார்.

ஒப்பந்தத்தில் ஐ.பி.எம்., நிறுவன முதன்மை அலுவலர் பிரின்ஸ் நெகேமியா, கமிஷனர் செபாஸ்டின் கையெழுத்திட்டனர். மாநகராட்சி துணைமேயர் மன்னன், மண்டல தலைவர் இசக்கிமுத்து, ஆத்மா நிறுவன செயல் இயக்குனர் ஞானசம்பந்தன், மாணிக்கம், மாநகராட்சி கல்வி அலுவலர் வைத்தியநாதன் பங்கேற்றனர்.
 

மாநகராட்சி பள்ளிகள் பராமரிப்பு : நிதி குழுவில் ஒப்புதல்

Print PDF

தினகரன்     05.01.2011

மாநகராட்சி பள்ளிகள் பராமரிப்பு  : நிதி குழுவில் ஒப்புதல்

கோவை, ஜன.5:

கோவை மாநகராட்சி நிதி குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர்கள் லட்சுமணன், சுந்தர்ராஜன், துரைராஜ், எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார், நிதி குழு தலைவர் நந்தகுமார், கவுன்சிலர்கள் செந்தில்குமார், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோவை மாநகராட்சியின் கிழக்கு, தெற்கு, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ஆரம்ப பள்ளி, நடுநிலை, மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் துப்புரவு தொழிலாளர்கள், குழாய் பொருத்துநர், மின் கம்பியாளர், மேற்பார்வையாளர் மூலம் தூய்மை பணி நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒரு ஆண்டிற்கு தூய்மை பணி நடத்தி பராமரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு ஒரு ஆண்டு தூய்மை பணி பராமரிப்பிற்கு 45.25 லட்ச ரூபாய், கிழக்கு மண்டலத்திற்கு 49.92 லட்ச ரூபாய், வடக்கு மண்டலத்திற்கு 43.70 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட மீன் மார்க்கெட் ஏலம் கடந்த 29ம் தேதி நடந்தது. மொத்தம் 64 கடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 1, 24, 38, 39, 54, 56 எண் கடைகளுக்கு மறு ஏலம் விட முடிவு எடுக்கப்பட்டது. இரு கடைகளுக்கு ஏலம் கோராமல் விட்டதால் மறு ஏலம் கொண்டு வரப்படவுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டில் 8 கடைகளுக்கு மறு ஏலம் விட நிதிக்குழு கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது.

தியாகி குமரன் மார்க்கெட்டில் கடந்த 24&12&2008ம் தேதி நடந்த மன்ற கூட்ட தீர்மானத்தில் படி இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்படவில்லை. பாதுகாப்பு, வருவாய் காரணமாக இப்பகுதியில் மீண்டும் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

 

கல்வி தரத்தை மேம்படுத்த மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி

Print PDF

தினகரன்     17.12.2010

கல்வி தரத்தை மேம்படுத்த மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி

மதுரை, டிச. 17: தனியார் பள்ளிகளுக்கு நிகராக மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதன் படி ஆரம்ப பள்ளிகளிலேயே 1 முதல் 5&வது வகுப்பு வரை யிலான மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் கல்வி அறிவை வளர்க்கும் புதிய திட்டம் அமல் செய்யப்படுகிறது.

இதற்காக துணை மேயர் மன்னன் முயற்சியால் தனி யார் கம்ப்யூட்டர் நிறுவனம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 100 ‘கிட்ஸ் மார்ட்‘ என்ற குழந்தைகள் பயிற்சி கம்யூட்டர் களை மாநகராட்சிக்கு இலவசமாக வழங்குகிறது. இதற்காக மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி மேயர் தேன்மொழி தலைமையில் நடந்தது.

ஆணையாளர் செபாஸ் டின் கூறும்போது “20 ஆரம்ப பள்ளிகளுக்கு தலா 5 கம்ப்யூட்டர் வீதம் வழங்கப்படும். ஒரு கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் 2 மாணவர் அமர்ந்து தானாக பயிற்சி பெற்றுக் கொள்ள முடியும். இதனை கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். குழந்தை பருவத்தில் கம்யூட்டர் கல்வி கற்பிக்கப்படுவதால், மேல் வகுப்புகளில் சிறந்து விளங்குவார்கள். மாநகராட்சி பள்ளிகளில் சென்னையை அடுத்து மதுரையில் இந்த திட்டம் நிறைவேறுகிறது“ என்றார்.
 
நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் சக்திவேல், நிறுவன முதன்மை அதிகாரி பிரின்ஸ்நெகமியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசம்பந்தன், மண்டல தலைவர் இசக்கிமுத்து பங்கேற்றனர். 
 


Page 26 of 111