Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பிளஸ் 2 தேர்வில் 1000க்கு மேல் எடுத்தால் மேற்படிப்புக்கு நிதியுதவி மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினகரன்                  10.12.2010

பிளஸ் 2 தேர்வில் 1000க்கு மேல் எடுத்தால் மேற்படிப்புக்கு நிதியுதவி மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை, டிச. 10: பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் பெறும் மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இன்ஜினியரிங், மருத்துவம் உள்பட உயர் கல்வி படிக்க நிதி உதவி வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கும் விழா நேற்று நடந்தது.

மதுரை மாநகராட்சி மற்றும் வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் ஈ.வே.ரா பள்ளியில் நடந்த விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் ஜெகதீசன் தலைமை வகித்தார். திட்டத்தைத் தொடங்கி வைத்து மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின் பேசியதாவது:

மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் தனியார் பள்ளிக்கு இணையாக உயர்ந்துள்ளது. இதனை மேலும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1000 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு இன்ஜினியரிங், மருத்துவம் உள்பட உயர்கல்விக்கு நிதி உதவி செய்யப்படும். விண்ணப்பம் பெறுவது முதல் கல்லூரியில் சேருவதற்கான அனைத்து உதவியையும் இந்த அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்படும். ஒரு மாணவருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த நிதியைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சித் தலைமைப் பொறியாளர் சக்திவேல், மாநகராட்சி கல்வி அதிகாரி வைத்தியலிங்கம், உதவிக் கல்வி அலுவலர் வெள்ளத்தாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

 

அரசு அனுமதி கிடைத்தவுடன் மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்

Print PDF

தினகரன்                    10.12.2010

அரசு அனுமதி கிடைத்தவுடன் மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்

கோவை, டிச. 10: கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இட்லி, தோசை மட்டுமின்றி ரவா உப்புமா, சேமியா, கேசரி என 18 வகை உணவுகளை தினமும் ஒவ்வொன்றாக வழங்க முடிவு எடுத்து, மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. திட்டம் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ1 கோடி செலவாகும்.

தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட் டது. ஆனால், திட்டம் தொடங்குவ தில் தாமதமாகி வருகிறது. இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா கூறுகையில், ‘’அரசு அனுமதிக்கு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும்" என்றார்.

 

சென்னை பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

Print PDF

தினகரன்               10.12.2010

சென்னை பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

சென்னை, டிச.10: வேளச்சேரியில் உள்ள சென்னை மேல்நிலை பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர், ‘லயன்ஸ் கிளப் & மாநகராட்சி இணைந்து 26 சென்னை பள்ளிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை திறந்துள்ளது. 67 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும்என்றார்.

 


Page 28 of 111