Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூரில் இ&டெண்டர் அறிமுகம்

Print PDF

தினகரன் 17.06.2010

பெரம்பலூரில் இ&டெண்டர் அறிமுகம்

பெரம்பலூர், ஜூன் 17: பெரம்பலூர் மாவட்டத்தில் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு இ&டெண்டர் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. டிஆர்ஓ பழனிசாமி முன்னிலை வகித்தார். முகாமை துவக்கி வைத்து கலெக்டர் விஜயக்குமார் பேசியதாவது:

தமிழகத்தில் அரசு மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் டெண்டர் விடும் முறை, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது இ&டெண்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 9 மாநகராட்சிகளில் இந்த முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது தற்போது நகராட்சி அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் கோரப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தும் இ&டெண்டர் முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் நகராட்சிகள் தங்கள் இணையதளம் மூலம் ஒப்பந்த அறிவிப்பை வெளியிடுவர். அனைத்து ஒப்பந்ததாரர்களும் இ&டெண்டர் முறையில் ஒப்பந்தத்தை கோர வேண்டும். தகுதி, திறமை வாய்ந்த ஒப்பந்தக்காரர்கள் போட்டி போட்டு பணிகளை செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறையாக இந்தமுறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். டிஆர்ஓ பழனிச்சாமி, தேசிய கணினி மைய அலுவலர் ரமேஷ்குமார் கலந்து கொண்டனர்