Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு:சான்றிதழ்களை ஆன்லைனில் பெற புதிய வசதி

Print PDF

தினமலர்    21.07.2010

நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு:சான்றிதழ்களை ஆன்லைனில் பெற புதிய வசதி

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன் லைனில் பெறும் புதிய வசதியை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் நேற்று துவக்கிவைத்தார்.நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் 4 வார்டு அலுவலகங்கள் மற்றும் 17 யூனிட் அலுவலகங்கள் மற்றும் உதவி நகர் நல அலுவலகர், சுகாதார ஆய்வாளர்கள் மூலம் உரிய மனுச் செய்து சான்றுகள் பெறும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு ஒரு முறையும், அதற்கான சான்றிதழ் பெற ஒரு முறையும் அலையவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு முதற்கட்டமாக 2000ம் ஆண்டு முதல் 2010 ஜூலை 20ம் தேதி வரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி குறித்த இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கம்ப்யூட்டர் மூலம் பல சேவைகளைப் பெற வசதி செய்யப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆன் லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறும் வசதியை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் நேற்று துவக்கிவைத்தார்.

இதில் கமிஷனர் டாக்டர் சுப்பையன், மண்டல தலைவர்கள் விஸ்வநாதன், முகம்மதுமைதீன், நகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக்கமிஷனர் சுல்தானா, பாஸ்கரன், கருப்பசாமி, சாந்தி, உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், அரசகுமார், சாகுல்ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் இந்த சேவையை டாõ://õடசஙைமநமெநடயவசன.கவö.டங என்ற இணைய தள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 21 July 2010 06:12