Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி 55, 56, 57வது வார்டில்நடமாடும் வாகனம் மூலம் வரிவசூல்

Print PDF

தினமலர் 24.08.2010

திருச்சி 55, 56, 57வது வார்டில்நடமாடும் வாகனம் மூலம் வரிவசூல்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் நடமாடும் வரி வசூல் வாகனம் இன்று 55, 56, 57 ஆகிய வார்டுக்கு சென்று வசூலில் ஈடுபடுகிறது.திருச்சி மாநகராட்சியில் வரிவசூல் பணியை துரிதப்படுத்தும் நோக்கத்துடன், பொதுமக்கள் வசதிக்காக நடமாடும் கம்ப்யூட்டர் வரிவசூல் மையம் வாகனம் மூலம் வரி, வரியில்லா இனங்கள் வசூல் பணி கடந்த ஆக., 15ம் தேதி துவங்கப்பட்டது. 21ம் தேதி வரை பொன்மலை கோட்டத்தில் வரி வசூலிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து வரும் 23ம் தேதி (இன்று) முதல் 28ம் தேதி வரை கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் வரி வசூலிக்கப்பட உள்ளது. வாகனம் வரும் தேதி, நிற்கும் இடம், வார்டு, நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று (25ம் தேதி): 55வது வார்டில் காலை 10 - 11 மணி வரை குறத்தெரு சந்திப்பிலும், காலை 11 - 11.30 வரை பாளையம்பஜார் விக்னேஷ் அப்பார்ட்மென்ட் அருகில் நிற்கும்.56வது வார்டில் காலை 11.30 - 12.30 மணி வரை தில்லைநகர் 1, 5, 10 குறுக்குச்சாலையிலும், மதியம் 12.30 - 1 மணி வரை தில்லைநகர் மெயின்ரோட்டிலும், மதியம் 1 - 2 மணி வரை சாஸ்திரிசாலையிலும் வாகனம் நிற்கும்.57வது வார்டில் 2 - 3 மணி வரை திருச்சி டவர் சாலை ரோடு, எம்..எம்., அப்பார்ட்மென்ட் அருகிலும், மதியம் 3 - 3.30 மணி வரை விக்னேஷ் எம்பயர் (சாலைரோடு) அருகிலும், மாலை 3.30 - 4 மணி வரை சாலைரோடு, ருக்மணி தியேட்டர் அருகிலும், மாலை 4 - 4.30 மணி வரை பாலாஜி அப்பார்ட்மென்ட் சிவசக்தி கங்கா, யமுனா, காவிரி இமேஜ் அருகிலும், மாலை 4.30 - 5 மணி வரை விக்னேஷ் பிளாசா அருகிலும் வரி வசூல் வாகனம் நிற்கும். வரி செலுத்துவோர் நடமாடும் வரி வசூல் மையத்தில் வரியை செலுத்தலாம்.