Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தானியங்கி தொழில்நுட்பம் முழுமையடைந்தால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.39 லட்சம் மிச்சமாகும்

Print PDF

தினமணி 22.12.2009

தானியங்கி தொழில்நுட்பம் முழுமையடைந்தால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.39 லட்சம் மிச்சமாகும்

கோவை, டிச.21: தானியங்கி தொழில்நுட்பம் முழுமையடைந்தால் கோவை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.39 லட்சம் மிச்சமாகும் என்று சால்ஜர் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசாமி கூறினார்.

இது குறிóத்து கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

கோவை, மதுரை மாநகராட்சிகளில் தானியங்கி தொழில்நுட்ப முறையில் தெரு விளக்குகளை பராமரித்து வருகிறோம். குஜராத், பெங்களூர் மாநகராட்சிகளிலும் இதே திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி முழுவதும் சுமார் 34 ஆயிரம் விளக்குகள் உள்ளன. இதற்கு ஆண்டுக்கு ரூ.1.30 கோடி மின்செலவு ஏற்படுகிறது. தானியங்கி தொழில்நுட்பம் அமல்படுத்தும் பணி விரைவில் முடிவடைந்துவிடும். இப் பணி முடிவடைந்தால் ஆண்டுக்கு ரூ.39 லட்சம் (ஏற்கெனவே ஆகும் மின்செலவில் 30 சதவீதம்) சேமிப்பாகும்.

இதுதவிர, ஆண்டுக்கு 1,300 டன் அளவுக்கு கார்பன்டை ஆக்ûஸடு வெளியேறுவது தடுக்கப்படும். மாநகராட்சியில் எரியாத தெருவிளக்குகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து எளிதில் கண்டுபிடிக்க இயலும். வோல்டேஜ் சென்சிங் மெக்கானிசம் பயன்படுத்தப்படுவதால் விளக்குகளின் ஆயட்காலமும் அதிகரிக்கிறது.

தானியங்கி தொழில்நுட்பம் முழுமையானதும் அதில் சேமிப்பாகும் தொகையில் 95 சதவீதம் எங்களது நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்கும் என்றார்.

நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ராஜேஷ் துரைசாமி, துணைத் தலைவர் ஆர்.நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.